புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 17, 2019)

தேவனுடைய நியமனங்கள்

1 யோவான் 1:9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன் னித்து எல்லா அநியாய த்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.


கடந்த தினங்களிலே, மோசே, பேதுரு மற்றும் பவுல் ஆகிய தேவ ஊழி யர்களின் அழைப்பையும், அவர்கள் வாழ்க்கையையும் சுருக்கமாக பார்த்தோம். தேவனுடைய நியமனத்திற்கு முன்னதாக இவர்களின் வாழ்க்கை இப்படியாக இருந்ததே, இப்படியான தவறுகளை இவர்கள் செய்தார்களே என்று இவர்கள் வழியாக தேவன் கூறும் அறிவு ரைகளை நாங்கள் அற்பமாக எண்ணுவோமாக இருந்தால், தேவனு டைய ஆளுகையை அசட்டை செய்கி ன்றவர்களாக இருப்போம். இன்றைய நாட்களிலே சில இடங்களிலே, “அந்த ஊழியரின் பழைய வாழ்க்கையை தெரியுமோ, அவர் இப்போது எனக்கு அறிவுரை கூறுகின்றார்” “அந்த சகோ தரன் முன்பு அனுபவிக்க வேண்டிய வைகளையெல்லாம் அனுபவித்துவிட் டார்” “என் அப்பா முன்பு செய்யாத காரியங்களையா நான் செய்கின்றேன், இப்போது இவர் எனக்கு போதிக்கின் றார்” என்று சில மனிதர்கள் கூறுவ தை கேட்கின்றோம். இப்படி பேசுபவர் கள் தேவனுடைய நியமனத்தை அச ட்டை செய்கின்றவர்கள். தங்கள் பாவத்தை ஏற்றுக் கொண்டு மனந் திருப்புவதற்கு பதிலாக, மற்றவர்களுடைய வாழ்க்கையில் இருந்து அவர்கள் கழித்துவிட்ட குப்பைகளை, தங்கள் உள்ளத்திலே எடுத்து வைக்கின்றார்கள். பிரியமானவர்களே, நீங்கள் யாதொரு குற்றத்தில் அகப்படும் போது, அதை உங்களுக்கு உணர்த்துகின்றவர்களுடன் சண்டை செய்யாதிருங்கள். உங்கள் குற்றங்களை நியாயப்படுத்த, உங்களை வழிநடத்துகின்றவர்களின் முன்னைய வாழ்க்கையைப் பற்றி பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் வாழ்வடையும்படி இருக்கும் ஒரே வழி இயேசு. அவருடைய ஆளுகையை நீங்கள் அசட்டை செய்தால், வாழ்வடையும்படி எங்கே போவீர்கள்? என்னை ஏற்றுக் கொள்ளுகின் றவன் என்னை அனுப்பின பிதாவை ஏற்றுக் கொள்ளுகின்றான் என்று இயேசு கூறினார். அதே போல இயேசு அனுப்பினவர்களை ஏற்றுக் கொள்கின்றவன், இயேசுவை ஏற்றுக் கொள்கின்றான். எனவே, நீங்கள் நன்மையை கண்டடையும்படி உங்களை கர்த்தரித்தில் தாழ்த்துங்கள், அவர் எங்களை சுத்திகரித்து வழிநடத்துவார்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, என் குறைகளை நியாயப்படுத்த, மற்றவர்களின் குறைகளை பேசாதபடிக்கு, என்னை தாழ்த்தி உம்மிடம் ஒப்புக் கொடுக்கும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 32:5