புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 15, 2019)

நீ குணமாகின பின்பு…

லூக்கா 22:32

நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்


இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிற வர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோ னும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக் கொ ண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: என் பின்னே வாருங்கள், உங்களை மனு~ரைப் பிடிக்கிறவர்க ளாக்குவேன் என்றார். உடனே அவர் கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள். இப்படியாக, இயே சுதாமே, சீமோன் பேதுருவை தம்மு டைய திருப்பணிக்காக பிரித்தெடு த்தார். சீமோன் பேதுரு, இயேசுவோடு சில ஆண்டுகளாக கூட இருந்து, இயே சுவின் போதனைகளை கேட்டவர், அதிசயங்களைக் கண்டவர், அதிசயங் களை செய்தவர், இயேசுவோடு உண வுண்டவர். வாழ்விலுல் சாவிலும் இயேசுவோடு இருப்பேன் என்று உறுதியாய் இருந்தவர். கர்த்தரை அதிகமாக நேசித்தவர். ஆனால் கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, தன்னுடைய எஜமானாகிய இயேசுவை, தனக்கு தெரியாது என்று கூறி, மூன்று முறை மறுதலித்தார். இது பெரிதான துரோகம். ஆனால், கர்த்தராகிய இயேசு, சீமோன் பேதுருவை, மறுபடியும் ஸ்திரப்படுத்தி, தன் மந் தைகளை (தன்னுடையவர்களை) மேய்க்கும்படிக்கான பொறுப்பை சீமோன் பேதுருவிடம் கொடுத்தார். சில வேளைகளிலே, ஊழிய பாதையிலே நாங்கள், மிகவும் உறுதியாக ஓடினாலும், சீமோன் பேதுருவைப் போல தடக்கி விழுந்து விடும் நேரங்கள் ஏற்படலாம். அதனால், நாங்கள் ஓடி வந்த ஓட்டம் முடிந்து விட்டது என்பது பொருள் அல்ல. கர்த்தர் மறுபடியும், தூக்கி நிலைநிறுத்துகின்ற வராயிருக்கின்றார். கர்த்தரை மறுதலித்த சீமோன் பேதுரு, மனம் கச ந்து அழுதார். கர்த்தர் உயிர்தெழுந்தபின், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா” என்றார். பிசாசானவன் எங்களை கோதுமையை புடைக்கிறது போல புடைக்கும் வேளையில், கர்த்தர் எங்களுக்காக பரிந்து பேசுகின்றவராக இருக்கின்றார். நீங்கள் குணமடைந்த பின், மற்றவனின் விழுகையில் அவனை குற்றப்படுத்தா மல், பெலவீனரைத் தாங்குங்கள். கர்த்தரின் அன்பை காட்டுங்கள்.

ஜெபம்:

எங்களை நேசிக்கின்ற தேவனே, நீர் எம்மீது கொண்ட நேசத்தை நாங்கள் மற்றவர்களின் பெலவீன நேரங்களில், அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படியான இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 21:17