புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 14, 2019)

முன்னைய நாட்கள்

சங்கீதம் 103:12

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.


இந்த உலகின் எஜமான்கள், மனிதர்களின் திறமைகளை கண்டு, அதை உறுதிப்படுத்திய, பின்பே அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றார் கள். ஆனால் தேவனாகிய கர்த்தர் தாமே, மனிதர்கள் பிறக்கு முன்னே முன்குறிக்கின்றவர். அவ்வண்ணமாக, மோசே என்னும் மனி தனை அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலை வழிநடத்தும் இரட்சக னாக முன்குறித்தார். அநித்தியமான பாவ சந்தோ~ங்களை அநுபவிப்பதை ப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்க ளோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொள்ளும் நாள் வரைக்கும், அதாவது, மோசே தன்னுடைய நாற்ப தாவது வயதுவரை பார்வோனுடைய அரண்மனையிலிருந்து, எகிப்தியரு டைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனா யிருந்தான். பிற்பாடு, எகிப்தைவிட்டு அந் நிய தேசத்திற்கு சென்று, அங்கே தனது எண்பதாவது வயதுவரை குடியிருந்தான். தன்னுடைய 80வது வயது வரைக்கும் அவன்; தன்னு டைய சொந்த ஜனங்களோடு, சஞ்சரித்து வந்த ஆண்டுகள் குறுகிய தாகயிருந்தது. எனினும், கர்த்தர் குறித்த நாள் வந்த போது, கர்த்தர் மோசேயை இரட்சகனாக உயர்த்தினார். கர்த்தர் அவனை இரட் சகனாக உயர்த்தி இருக்க, யார் மோசேக்கு கொடுக்கப்பட்ட அதி காரத்ததை குறித்த கேள்வி கேட்க முடியும்? யார் மோசேயின் முன் னைய நாட்களை குறித்து விமர்சிக்க முடியும்? கர்த்தரோடு எதிர்த்து நிற்க யாரால் கூடும்? ஒருவராலும் முடியாது. இதற்கொத்ததாகவே, கர்த்தர் எங்களை தம்முடைய பிள்ளைகளாகும் அதிகாரத்தைக் கொடுத் திருக்கின்றார். நாங்கள் கர்த்தரை அறிய முன்பிருந்த நாட்களை குறித்து மற்றவர்கள் விமர்சிக்கலாம், ஆனால் கர்த்தரோ இனி எங்கள் முன்னைய பாவங்களை நினைப்பதில்லை. அதுபோல மற்றய விசுவா சிகளின் முன்னைய பாவங்களையும் எங்களை வழிநடத்த நியமிக் கப்பட்டவர்களின் முன்னைய பாவங்களையும் அவர் நினைப்பதி ல்லை. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூர மாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். எனவே கர்த்தர் அகற்றியவைகளை நாங்கள் பற்றிக் கொள்ளாதிரு ப்போம். கர்த்தர் ஒருவரே நீதியுள்ள நியாயாதிபதி.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நீர் மனமிரங்கி உம்முடைய பிள்ளைகளின் முன்னைய நாட்களை மன்னித்திருக்கின்றீர். நாங்களும் அதை இனி நினையாதிருக்க பெலன் தந்து வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 7:20-30