புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 13, 2019)

தேவைகளை சந்திக்கும் தேவன்

1 இராஜாக்கள் 17:14

கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையி டும் நாள்மட்டும் பானை யின் மா செலவழிந்து போவதும் இல்லை; கல சத்தின் எண்ணெய் குறை ந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


எலியா என்னும் தீர்க்கதரிசியின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறு மாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, அந்நாட்களிலே, சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவை தன் குமாரனோடு வாழ்ந்து வந்தாள். அவளிடம் இருந்ததெல்லாம், பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே. இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இர ண்டு விறகு பொறுக்குகிறேன் என்று அவள் கர்த்தரால் அனுப்பப்பட்ட தேவ மனிதனாகிய எலியாவுக்கு கூறி னாள். தேவ மனிதனோ, அந்த ஏழை விதவையைப் பார்த்து “பயப்படாதே!” என்று பெலப்படுத்தினார். கர்த்தர் செய்யப் போகும் காரியத்தை அவளுக்கு கூறினார். பஞ்ச காலமாக இருந்தும், எப்படி மாவும் எண்ணெய்யும் தேவ மனிதர் தருவார் என்ற சந்தேகம் ஏதும் இல்லாமல். அவள் அவருடைய வார்த்தையை விசுவாசித்து, தேவ மனிதன் கூறிய பிரகாரமாக செய்தாள். தேவனாகிய கர்;த்தர் அந்த ஏழை விதவை யின் வீட்டை ஆசீர்வதித்தார். கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே, பஞ்ச நாட்கள் முடியும்வரை பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை. கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. தேவனாகிய கர்த்தர் அந்த ஏழை விதவையை நினைவு கூர்ந்தார். தேவ வார்த்தையை விசுவாசிப்பத ற்கு, குறித்த சூழ்நிலையில் எந்த ஆதாரமும் இல்லாத வேளை யிலே, அந்த பெண்மணி, தேவ வார்த்தையை விசுவாசித்தாள். தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டாள். தேசம் முழுவதும் ஆதரவற்ற நிலையிலிருந்தாலும், கர்த்தருடைய வார்த்தையை விசுவாசியுங்கள். கர்த்தருடைய கை குறுகிப் போகவில்லை. அவர் கேட்கக்கூடாதபடி க்கு அவர் செவிகள் மந்தமாகவில்லை. தேவன் அதிசயமான வழிக ளிலே உங்கள் தேவைகளை சந்திப்பார்.

ஜெபம்:

வாக்குரைத்த தேவனே, உம்மை நம்பினோரை நீர் வெட்கப்பட்டு போகவிடுவதில்லை. அந்த உண்மையை நான் என் வாழ்வில் கடைப்பிடிக்கும்படியாய் என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 4:25-26