புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 12, 2019)

கர்த்தரால் ஆகும்

எஸ்தர் 10:3

யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வே ருவுக்கு இரண்டாவதா னவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திர ளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங் களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக் கெல்லாம் சமாதானமு ண்டாகப் பேசுகிறவனு மாயிருந்தான்.


அகாஸ்வேருவின் ராஜா அரசாண்ட நாட்களிலே, பாபிலோன் ராஜா வாகிய நேபுகாத்நேச்சாரினால் சிறைப்பிடிக்கப்பட்ட மொர்தெகாய் என் னும் யூதன் வாழ்ந்து வந்தான். இவன் ராஜாவுக்கோ, ராஜ்யத்திற்கோ எந்த தீங்கும் செய்யாதவன். மாறாக, அகாஸ்வேரு ராஜாவை கொன் றுபோட, போடப்பட்ட சதித்திட்டத்தை, ராஜாவுக்கு தெரியப்படுத்தி, ராஜாவை உயிர் ஆபத்திலிருந்து காத்துக் கொண்டவன். அந்த நன் மை நினைக்கபடாமல் போயிற்று. எனி னும், ராஜாவுக்கு பிரியமான ஆமான் என்னும் மனிதன், மொர்தெகாய்க்கு விரோதியாக இருந்தான். மொர்தெகா யுடன் சேர்த்து, சகல யூதர்களையும் கொன்று போடும்படி சதி செய்து, ராஜ கட்டளையை பெற்றுக் கொண் டான். இதன்படி யூதர்களின் அழிவின் திகதி நிர்ணயிக்கப்பட்டாயிற்று. எல் லாமே மொர்தெகாய்க்கும் யூதர்களுக் கும் எதிராக இருந்தது. விடுதலைய டையும் சாத்தியம் இல்லை. இப்படி ப்பட்ட சூழ்நிலை எங்கள் வாழ்விலும் ஏற்படலாம். நாங்கள் செய்த நன்மை கள் நினைக்கப்படாமல் போகலாம். ஆனால் சர்வத்தையும் ஆளும் சர்வ வல்ல தேவன் ஒரு போதும் மறந்து போகமாட்டார். இவ்வண்ணமாகவே அதிசயிக்க தக்கவிதமாக யூத ஜனங்க ளுக்கு விடுதலையும் மொர்தகாய்;க்கு பதவி உயர்வும் வந்தது. ராஜாவுக்கு பிரியமாக இருந்த அதிபதியாகிய ஆமான், ராஜாவின் விரோதியா க்கப்பட்டான். பதவியை இழந்து போனான். தான் போட்ட சதிக்குள் அவனே அழிந்து போனான். பிரியமானவர்களே, விடுதலை கர்த்தரிட த்திலிருந்து வரும். ஜெயம் கொடுக்கும் தேவன் எங்களோடிருக் கின்றார். அவருடைய ஆளுகைக்கு முடிவில்லை. அவருடைய நேரத்திற்காக காத்திருந்து ஜெபியுங்கள். மொர்தகாய்க்கு வந்த விடுதலையையும் உயர்வையும் தேவன் உங்களுக்கும் தந்தருள்வார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, மனிதர்கள் மறந்து போனாலும், நீர் ஒருபோதும் மறந்து போவதில்லை. உம்முடைய குறித்த நேரத்தி ற்காக காத்திருக்கும் பொறுமையை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 3:1-8