புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 11, 2019)

அழைப்பை அறிந்து கொள்ளுங்கள்

ரோமர் 12:4

ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,


ஐயா மி~னரி அவர்களே, உங்கள் சொந்த, பந்தம், செல்வம் யாவை யும் விட்டு, பல தியாகங்களை செய்து, எங்கள் மத்தியிலே பல ஆண் டுகளாக சேவை புரிந்து வருகின்றீர்களே, எல்லா ஊழியர்களும் உங் களைப் போல இருந்துவிட்டால் எவ்வளவு நலமாயிருக்கும் என ஒரு பெண்மணி மி~னரியிடம் கேட்டாள். அவரோ, தயவாக, மகளே, நான் இன்று அடைந்திருக்கும் இந்த நிலைக்கு வருவதற்கு, தேவனுடைய கிருபையானது, சபையிலும், சில அமை ப்புக்களிலுள்ள பல மனிதர்கள் வழி யாகவும் வெளிப்பட்டது. அந்த மனிதர் கள் தங்கள் தனித்துவமான அழை ப்பை முறைப்படி செய்ததால் நான் இன்று உன் முன்னிலையில் நிற்கி ன்றேன். இந்த கிராமத்திலும் என் அழை ப்பை நிறைவேற்ற உன் குடும்பத்தைப் போல, இன்னும் பலர் எனக்கு ஓத்தா சையாக இருந்து வருகின்றார்கள். பலர் பொருளாதார உதவியை செய்கின்றார்கள், பலர் எனக்காக ஜெபித்து வருகின்றார்கள். அவையெல்லாம் அவர்களுடைய தனித்து வமான அழைப்பே. எல்லாம் தேவனுடைய ஈவு. நான் ஒரு அப்பிர யோஜனமான மனு~ன் என அவர் கூறினார். முன்னோடியாய் வாழ்ந்த நல்ல சாட்சிகளை பார்த்து, அவர்களைப் போல நானும் மாற வேண் டும் என்ற விருப்பம் எங்களில் பலருக்கு உண்டு. இயேசுவுக்கு முன் பாக வந்த யோவான் ஸ்நானன், கர்த்தருக்கு வழியை ஆயத்தப்ப டுத்த வந்தார். தன் பணியை நிறைவேற்றினார். இயேசுவுக்கு பின், அவருடைய அப்போஸ்தலர்களும் தம் பணியை நிறைவேற்றினார்கள். இன்று உலகிலே, அப்போஸ்தலர், போதகர்கள், மேய்ப்பர்கள், தீர்க்கத ரிசிகள், சுவிசே~கர்கள், மூப்பர்கள், உதவி ஊழியர்கள் என பலர் தங்கள் பொறுப்;பை நிறைவேற்றி வருகின்றார்கள். இவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற இன்னும் பலர் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். சரீரத்தின் அவயவங்களின் தொழிற்பாடு வேறுபட்ட போதிலும், அவை யாவும் ஒரே சரீரத்தின் அவயவங்களாக இருப்பது போல, நாங்கள் யாவரும்;, தேவனுடைய அநாதி திருச்சித்தத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றோம். எனவே, நாங்கள் எங்களுக்கு கொடுக்க ப்பட்ட பொறுப்பில் உறுதியாயிருப்போம்.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் விரும்பும் காரியங்களைச் செய்யாமல், உம்முடைய அழைப்பை அறிந்து அதன்படி உம்முடைய திருச்சித்த த்தை என் வாழ்வில் நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 12:12-27