புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 10, 2019)

சிறிய மாற்றங்கள்...

எபேசியர் 3:19

தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும்,


ஒரு குடும்பத்திலே ஏற்பட்ட எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, குடும்பத் தேவைகளை சந்திப்பதற்காக, கணவன் மனைவியாக இருவரும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. பல பாடுகள், க~;டங்கள் மத்தியிலே, தங்கள் சுகபோகங்களையும் உல்லாச பய ணங்களையும் தியாகம் செய்து, தங்கள் பிள்ளைகள் நல்ல நிலை க்கு வரவேண்டும் என்று அயராது உழைத்தார்கள். பிள்ளைகள் சிறார் களாக இருந்ததால், இவர்களுடைய பாடுகளின் கருப்பொருளை அறிய முடி யாதிருந்தது. ஆனால் பல ஆண்டுகள் கடந்து சென்று, பிள்ளைகள் வளர்ந்து முதிர்ச்சி நிலையை அடைந்த போது, தங்கள் பெற்றோர் செய்த தியாகங் கள் எவ்வளவு பெரியது என்று அறி ந்து கொண்டார்கள். அதை நினைக்கையில் அவர்கள் உள்ளத்திலே கண்ணீர் பெருகிற்று. அவர்கள் ஏன் இப்படியாக க~;டப்பட்டார்கள் என்பதை அதிகமாக சிந்தித்த அவர்களுடைய மகள், தன் வாழ்க் கையை சிறப்பாக வாழ்வதனால் மாத்திரமே நான் என் பெற்றோரின் பிரயாசத்தின் கருப்பொருளை நிறைவேற்ற முடியும் என்று, தன் வாழ் க்கையை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள். மேலும் பெற்றோரை இன் னும் அதிகமாக நேசித்தாள். அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருந் தாள். பெற்றோரின் சிறப்பான குண இயல்புகள் தன் வாழ்விலும் பெருக வேண்டும் என்று வாஞ்சித்தாள். இப்படியாக தன் வாழ்க்கை யில் சிறிய மாற்றங்களை செய்ய ஆரம்பித்தாள். பிரியமானவர்களே, தேவனுடைய அநாதி அன்பை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண் டும். ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு தன் ஏக சுதனாகிய இயேசுவை எங்களுக்காக கொடுத்தார். எங்கள் பாவங்களை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக அவர் மாறி னார். மனிதரின் அறிவுக்கெட்டாத தேவ அன்பை தியானிக்கும் போது எங்கள் உள்ளத்தில் நன்றி பெருக வேண்டும். அந்த நன்றியுணர்வு எங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டு பண்ண வேண்டும். நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனு~னில் வல்லமை யாய்ப் பலப்படவும்,தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படு ம்படி, பிதாவாகிய தேவனை நோக்கி முழங்கால்படியிட்டு, ஜெபியு ங்கள், வாழ்வில் சிறிதான மாற்றங்களை ஆரம்பியுங்கள். தேவ ஆவி யானவர் உங்களில் பெரிதான மாற்றங்களை உண்டாக்குவார்.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் சகல பரிபூரணத்திலும் நிறைவடையும்படியாய், என் வாழ்வில் நன்மைகேதுவான தீர்மானங்களை எடுத்து, அவற்றில் நிலைவரப்பட கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 3:15-16