புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 09, 2019)

அழைப்பை காத்துக் கொள்வோம்

நீதிமொழிகள் 13:3

தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடு களை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்


மனிதர்கள் பல காரணங்களுக்காக ஒன்று கூடுகின்றார்கள். ஒரு சில நன்மைக் கேதுவானவைகளும், வேறு சில துர்ஆலோசனையை பிணை க்கின்றதற்கேதுவாகவும் இருக்கின்றது. பிரதான ஆசாரியர்கள் இயேசு வோடு கூட லாசருவையும் கொலைசெய்யும்படி ஒன்று கூடினார்கள். நீதியை நடப்பிக்க நியமிக்கப்பட்ட இவர்கள், அநீதியை நடப்பிக்கும் படியாய் துர்ஆலோசனையை செய் தார்கள். இயேசு பரலோகத்திற்கு எழு ந்தருளிய பின்பு, அவர் உரைத்தபடி யே, சீஷர்களில் ஏறக்குறைய நூற் றிருபதுபேர் கூடி வந்தார்கள். பெந்தெ கொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரி டத்திலே கூடி வந்த போது, அந் நாளிலே பெரிதான திவ்விய நன்மை உண்டானது. இன்று நாங்களும் பல மட்டங்களிலே ஒன்றுகூடி வருகின் றோம். அந்நிகழ்வுகள், சபை ஆராதனை சார்ந்தவைகளாகவும், சபை நிர்வாகம் சார்ந்ததாகவும், ஊழியங்கள் சார்ந்ததாகவும், மற்றும் இதர நிகழ்சிகளாகவும் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களிலே, விசுவாசிகள் மத்தியிலே வரும் கருத்து முரண்பாடுகளின் நிமித்தம், சிலர் மனமடி வடைந்து போகலாம். அவர்களை தேற்றும்படிக்கு நாங்கள் ஒரு சிலராக ஒன்று கூடலாம். இப்படியாக பல விடயங்களுக்காக நாங்கள் இருவராக, குடும்பங்களாக, ஒரு சிறு கூட்டமாக, சபையாக ஒன்று கூடலாம். எப்படிப்பட்ட கூட்டமாக இருந்தாலும், எங்கள் சிந்தனை, சொல், செயல் வழியாக தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும். இன்னுமொருவரின் குறையையோ, அல்லது சபையில் நடைபெற்ற ஏதாவது தவறுதலையோ சம்பா~pத்துக் கொண்டிருத்தல் பக்திவிருத் தியை உண்டுபண்ணாது. அவை பிரிவினையின் கசப்பான வேரை முளைத்தெழும்பச் செய்யும். அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். எனவே ஆகாத சம்பா~ணைகளை எம்மைவிட்டு அகற்றி, உன்னதமான அழை ப்பையுடைய நாம், எங்கள் உள்ளத்தால் தேவனை உயர்த்துவோம்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, அநாவசியமான வார்த்தைகளையும், ஆகாத சம்பாஷணைகளையும் என்னைவிட்டு தூரப்படுத்தும்படியாய் உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 4:7