புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 08, 2019)

ஆசீர்வாதத்தின் வழி

சங்கீதம் 119:105

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.


ஆபிரகாம் என்னும் மனிதனை தேவனாகிய கர்த்தர் அழைத்த போது, அந்த அழைப்போடு, தேவன்தாமே ஆபிரகாம் வேறு பிரிக்கப்பட்ட வாழ் க்கை வாழ்வதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். கர்த்தர் ஆபிராமை நோக்கி: “நீ உன் தேசத்தையும், உன் இனத்தை யும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக் குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என்றார். அவன் கீழ்ப்படிந்தான். விசுவாசத்திற்கு தந்தையாக வரும்படி க்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக் கொடுத்தாhர். உன்னதமான அழை ப்பை பெற்ற நாமும், அந்த அழைப் போடு, வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை, கர்த்தரை சார்ந்து வாழும் வாழ்க்கை வாழும்படிக்கு, தேவனாகிய கர்த்தர் தாமே, அதற்குரிய வழிமுறைகளையும் சொல்லி தந்திருக்கின்றார். “நான் ஏன் என் தேசத்தையும், இன த்தையும், தகப்பன் வீட்டையும் விட்டு செல்ல வேண்டும்” என்று ஆபிரகாம் கேட்டிருக்கலாம். ஆனால், அவன் தேவன் பேரில் வைத்த விசுவாசத்தினால், எது என் வாழ்க்கைக்கு அதி சிறந்தது என்பதை தேவன் ஒருவரே அறிவார் என்ற உறுதி ஆபிரகாமிடம் இருந்தப டியால், அவன் கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்தார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர், அவர் எல்லாம் அறிந்தவர். எல்லாம் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றது என்ற பல கூற்றுக்களை நாங்கள் அறிக்கையிடுகின்றோம். இப்படி அறிக்கையிட்ட நாம், அவர் ஒரு காரியத்தை செய்ய சொல்லும் போது, அதற்கு எதிராக பல கேள்வி களை கேட்போமாக இருந்தால், கர்த்தரைக் குறித்து சந்தேகம் அடை கின்றவர்களாக இருப்போம். எங்கள் உண்மையான நிலையையும், எங்கள் தேவையையும், அதற்குரிய பதிலையும் அறிந்தவர் தேவன் ஒருவரே. உன்னதமான அழைப்பை தந்தவர், நாங்கள் பரிசுத்த வாழ்வு வாழும்படியாய், இருக்கும் தடைகளை அகற்றும் வழிகளையும் சொல் லித் தருகின்றார். செல்லும் பாதையில், வரவிருக்கும் கண்ணிகளிலி ருந்தும் தப்பித்துக் கொள்ளும் வழியையும் சொல்லித் தருகின்றார். அவருடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நடக்கின்றவன், இடறிப் போவதில்லை. அவனே நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வான்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, என் வாழ்வில் நித்திய மகிழ்ச் சியை அடையும் வழியை அறிந்தவர் நீர் ஒருவரே, அந்த வழியில் நான் உறுதியாய் நிற்கும்படிக்கு எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 119:1-5