புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 06, 2019)

சவுல் ராஜா

1 சாமுவேல் 15:22

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?


இஸ்ரவேலின் முதல் ராஜாவாக உயர்த்தப்பட்ட சவுல் என்னும் மனி தனின் வாழ்க்கையை சற்று தியானித்து, தேவனுடைய சத்தத்தை புற க்கணிக்கின்றவர்களின் முடிவை ஆராய்ந்து பார்ப்போம். சவுல் என் னும் வாலிபன், சமஸ்த இஸ்ரவேலுக்கும் முதல் ராஜாவாக ஏற்படுத் தப்பட்டான். இவன் ராஜாவாக ஏற்படுத்தப்படும்படி, இஸ்ரவேல் ஜனங் கள் மத்தியில் எந்த நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவன் அல்ல. தங்கள் முதல் ராஜா இவ்வண் ணமாக இருப்பான் என்று அவர்கள் அறியாதிருந்த வேளையிலே, தேவனா கிய கர்த்தர்தாமே சவுலை பிரித்தெ டுத்து, இப்படிப்பட்ட கனத்திற்குரியவ னாக்கினார். கர்த்தர் இவனை ஆசீர் வதித்தார், இவனுடைய ராஜ்யபாரம் ஸ்திரப்பட்டிருந்தது. எனினும், தான் இந்த நிலைக்கு எப்படி வந்தேன் என் பதை மறந்து, தேவனாகிய கர்த்தருடைய நியமங்களை அசட்டை செய்பவனாக இருந்தான். தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராக குற்றம் செய்த பின்பு, மனந்திரும்பி மன்னிப்பை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக, தான் செய்ததை நியாயப்படுத்த முயன்றான். அவன் தன் பார்வைக்குச் சிறியவனாயிருந்தபோது தன்னை இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராக்கின கர்த்தரை மறந்து, அவரை புறக்கணித்தான். ஈற்றிலே, கர்த்தர் அவனை புறக்கணித்துத் தள்ளி னார். பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தர் தாமே, அற்பமான எங் களை, தம்முடைய குமாரனுடைய ராஜ்யத்திற்கு பங்காளிகளாகும்படி மகா பெரிதான அழைப்பை தந்திருக்கின்றார். இந்த அழைப்பு சவுல் என்னும் மனிதன், சமஸ்த இரஸ்வேலுக்கும் ராஜாவாக ஏற்படுத்தப்பட்டதைவிட அதி உன்னதமான அழைப்பு. எனவே சவுல் ராஜாவைப் போல நாங்கள் தேவனுடைய வார்த்தையை அற்பமாக எண்ணக் கூடாது. சிறிய குற்றம்தானே, அதைப் பிற்பாடு பார்க்கலாம் என்று நாட்களை விரயப்படுத்தும் போது, அந்த சிறிய தீமையான வித்து, சீக்கிரத்தில் வளர்ந்து, வாழ்க்கையில் பெரிதான தீங்கை உண் டு பண்ணிவிடும். எனவே, நாங்கள் சவுல் ராஜாவைப் போல், எங்களை உயர்த்திய தேவனை மறந்து விடாமல், எப்போதும் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

மனதுருக்கமுடைய தேவனே, உன்னதமான அழைப்பை பெற்ற நான்;, ஒரு போதும் உம் வார்த்தையை மறந்து போகாமல், கீழ்ப்படிந்து வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத்திராகமம் 19:5