புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 02, 2019)

தேவன் யுத்தம் செய்வார்

நெகேமியா 4:20

நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன்.


நெகேமியா என்னும் தேவ ஊழியனுடைய நாட்களிலே, அவர்கள் கட்டும் எருசலேம் மதில்களின் வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருந்தது. பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து நெகேமியாவுடன் திரும்பி வந்த குறிப்பிடப்பட்ட ஜனங்கள், அலங்கத்தின்மேல் (மதில்கள்) சிதறப்ப ட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருந்து வேலை பார்த்து வந்தார்கள். சிதறி இருப்பதினால், பகைஞர் எதிர்க் கும் போது, அவர்களை மேற்கொள் வது கடினம். அதனால், அவர்கள் எவ் விடத்தில் எக்காளச் சத்தத்தைக் கேட் கின்றார்களோ, அவ்விடத்திலே வந்து, ஒன்றாய் கூடும்படியாய் முடிவெடுத்தா ர்கள். அவ்விடத்திலே “நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார்” என்று நெகேமியா கூறியிருந்தார். பிரி யமானவர்களே, நாங்கள் செல்லும் சபையின் ஊழியங்கள் பரந்திருக்கி ன்றது. பலர் அந்த ஊழியத்தில் பங் கேற்கின்றார்கள். ஒவ்வொருவரும் தனி ப்பட, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து வருகின்றபோதிலும், எங்கள் பிரதானமான நோக்கத்தை மறந்து விடக்கூடாது. எங்கள் பிரதான ஆசாரியர் யார் என்பதையும், எங்கள் பொதுவான எதிரி எவன் என்பதையும் நாங்கள் மறந்துவிடலாகாது. பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி, அவருடைய அன்பின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய ராஜ்யத்திற்குட்பட் டவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் பிரதானமான நோக் கம். எங்கள் பிரதான மேய்ப்பர், மீட்பராகிய இயேசு கிறிஸ்து. எங்கள் பொதுவான எதிரி பிசாசானவன். அந்த எதிரி ஆதியிலிருந்து வஞ்சி க்கின்றவனாகவே இருந்து வருகின்றான். நாங்கள் தனித்து செயற்பட முயற்சிப்போமானால், சீக்கிரத்தில் வஞ்சிக்கப்பட்டு போவோம். நாங் கள் சரீரப்பிரகாரமாக, வேறு இடங்களில் ஊழியங்கள் செய்ய நேர்ந் தாலும், நாங்கள ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இருக்க வேண்டும். நாங்கள் ஆவியிலே ஒருங்கிசைந்து ஒன்றித்து இருக்கும் போது, தேவன் தாமே எங்களுக்காக யுத்தம் செய்வார.;

ஜெபம்:

இரக்கத்தின் சிகரமாகிய தேவனே, ஐக்கியத்தின் மேன்மையை உணர்ந்தவர்களாய், எப்போதும் இசைந்த ஆத்துமாக்களாய் இருந்து உம்முடைய திருச்சித்தத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 2:1-2