புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 28, 2019)

சபை கூடிவருதலின் அவசியம்

எபிரெயர் 10:25

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்;


எங்களுடைய நாளாந்த வாழ்க்கையிலே நாங்கள் எதிர்பாரத நிகழ் வுகள் நடைபெறுவதுண்டு. இந்த உலகத்திலே தீமை மலிந்திருப்பதி னால், நாங்கள் எதிர்நோக்கும் எதிர்பாராத நிகழ்வுகளில் பல எங்கள் வாழ்க்கைக்கு சவாலாகவே இருக்கின்றது. அவற்றுள் சிலவற்றினால், நாங்கள் சபை கூடுதலில் கலந்து கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப் படுகின்றறோம். நோய், விபத்து, தவிர் க்கமுடியாத தூரப்பிரயாணம், உயிரிழ ப்பு, யுத்தம் போன்ற நிகழ்வுகள் ஏற்ப டுவதனால், சபை கூடிவருதலில் கல ந்து கொள்ள முடியாமல போகலாம். சிலர் வைத்திய சாலைகளிலும், முதி யோர் பராமரிப்பு நிலையங்களிலும், சிறைச் சாலையிலும் இருப்பதால், அவ் விடங்களிலே நடக்கும் ஆராதனைக ளில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். இவை யாவும் எங் கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள். ஆனால் ஆராதனை க்கு செல்லாமல் இருப்பதற்கு சாட்டுப் போக்குகளை தேடும் மனி தர்களைப் போல நாங்கள் வாழக் கூடாது. இப்படிப்பட்டவர்கள், தேவன் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கின்றார் என்பதைக் கூட உண ரமுடியாமல், தங்கள் குடும்பத்தினரையும், போதகர் மற்றும் விசுவாசி களை திருப்திப்படுத்தும் முகமாக பல சாட்டுப் போக்குகளை சொல்லு வார்கள். தாவீதின் நாட்களிலே, தேவனுக்குரிய ஆராதனை எருசலே மிலே நடந்து வந்தது. அப்போது, அந்த நாட்டின் ராஜாவாயிருந்த சவுல், தாவீதை கொன்றுபோடும்படி சதித்திட்டம் போட்டிருந்ததி னால், தாவீதுக்கோ எருசலேமுக்கு செல்ல முடியாமற் போய்விட்டது. இதனால் அவர் இருதயம் வலுவாக வேதனைப்பட்டது. தேவ சமுக த்திற்கு எப்போது செல்வேன் என அவர் தாகமாகயிருந்தார். பிரிய மானவர்களே, எங்கள் இருதயமும் அப்படியாக தேவ சமுகத்தை நாடித் தேட வேண்டும். பெந்தேகோஸ்தே நாளென்று, சுமார் 120 பேர் ஒருமனப்பட்டு கூடி வந்தார்கள், அங்கே தேவ ஜனங்கள் ஒருமித்து கூடிவந்த போது, அங்கே தேவன் பெரிய காரியங்களை நடப்பித்தார். அதுபோல நாங்களும் ஒருமித்து கூடுகின்ற இடத்திலே தேவன் பெரிய காரியங்களை நடப்பிப்பார்.

ஜெபம்:

பரலோக பிதாவே, நீர் எங்களுக்கு அருளின கூட்டுறவு ஐக்கியத்தை நாங்கள் அசட்டை செய்யாதபடிக்கு, ஆர்வத்தோடு ஒருமித்து உம் மைத் துதிக்க என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:11-13