புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 27, 2019)

இனி வரும் கன மகிமை

எபிரெயர் 10:39

நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.


நாங்கள் இம்மைக்கேற்ற இன்பங்களுக்காக தேவனைத் தேடுகின்றவ ர்கள் அல்லர். இந்த பூமிக்குரிய காரியங்கள் தற்காலிகமானதும், அழி ந்து போகின்றதுமாயிருக்கின்றது. தேவனுக்காக பல தியாகங்களை செய்து பாடு அனுபவிப்பவர்களைப் பார்த்து, “பல ஆண்டுகள் நீங் கள் இவ்வளவாக பிரயாசப்பட்டும், இந்த உலகத்திலே என்னத்தை கண்டீர்கள்” என்று சிலர் இப்படியாக கூறிக் கொள்வார்கள். இவ்வண்ண மாய் கூறுகின்றவர்கள், தேவனுடைய ஆளுகையைக் குறித்த அறிவு அற்றவ ர்கள். இந்தப் பூமிக்குரிய ஆண்டுகள் முடிந்து போனாலும், தேவனுடைய ஆளுகை முடிந்து போவதில்லை. இம் மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந் தால், எல்லா மனு~ரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் என வேதத்திலே வாசிக்கின் றோம். இந்த உலகம் தரும் இன்பங்களே தேவ ஆசீர்வாதம் என, சுக போகங்களிலே மூழ்கி பலர் விசுவாசக் கண்கள் சொருகிப் போன வர்களாக வாழ்கின்றார்கள். அவர்கள் தாங்களும் தேவனுடைய வழிக ளிலே நடப்பதில்லை, அதே நேரத்தில் தேவனுடைய வழிகளிலே பிர யாசப்படுகின்றவர்களையும் பார்த்து நகைத்துக் கொள்வார்கள். இந்த உலகத்திலே நாங்கள் அடைந்திருக்கும் ஐசுவரியம் அல்லது செல்வ செழிப்பு எங்கள் ஆவிக்குரிய நிலையின் அளவு கோல் அல்ல. ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவி டாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்த த்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வரு வார், தாமதம்பண்ணார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயி ராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். எனவே இனிவர விருக்கும் ஈடு இணையில்லாத மகிமையை நோக்கிப் பார்ப்போம். இந்த உலகத்தாரின் அறியாமையினால் உண்டாகும் பேச்சுக்களினால் சோர்ந்து போகாதிருப்போம்.

ஜெபம்:

அழைத்த தேவனே, இனி வரவிருக்கும் ஈடு இணையில்லாத மகிமையை எங்கள் விசுவாசக் கண்களால் காணும்படிக்கு எங்கள் மனக் கண்களை திறந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 15:19