புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 26, 2019)

மன்னிப்பின் மகிமை

நீதிமொழிகள் 19:11

மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும். குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.


ஒரு மனிதன், அயலில் வாழ்ந்து வந்த ஒரு விசுவாசக் குடும்பம் ஒன் றின் இக்கட்டான சூழ்நிலைகளில், தன்னலம் கருதாது, பல உதவி களை செய்து வந்தான். ஆனால், சில ஆண்டுகள் கடந்து சென்ற பின், அந்த குடும்பத்தினர் அந்த மனிதனுக்கு எதிராக தீமையான காரியம் ஒன்றை செய்துவிட்டார்கள். அதனால் அந்த மனிதன் மனம் மிகவும் புண்பட்டது. இந்த நிலையை எப்படி அணுகுவது என்பதைக் குறி த்து பல விதமான மாம்ச சிந்தைகள் அவன் மனிதில் தோன்றிற்று. எனினும் “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக் கடவர்கள்;” என்னும் வேத வார்த்தை அவனுடைய கோபத்தின் உக்கிரத்தை அடக்கியது. உக்கிர கோபமானது மனி தன் நிதானமாக சிந்தித்து செயலாற்றும் ஆற்றலை தடை செய்யும். எனவே பொறுமையாக தன்னுடைய நிலையை தேவனுடைய சமுகத்திலே ஆராய்ந்து பார்த்தான். கர்த்தராகிய இயே சுவை நோக்கிப் பார்த்தான். “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடி க்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போ லவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” என்னும் வார்த்தை அவன் மனதை தெளியப் பண்ணிற்று. ஆம் பிரிய மானவர்களே, பதறின காரியம் சிதறிப் போகும். எனவே கோபத்தில் செயலாற்றுவதை நிறுத்தி விடுங்கள். தன்னை துன்புறுத்துகின்றவர் களின் அக்கிரமங்களையும், தன்மேல் சுமந்து கொண்ட இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் எங்களுக்கு அளித்த மன்னிப்பின் மாட் சிமையை சற்று எண்ணிப்பாருங்கள். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ் வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். இப்போதும், அவர் நம்முடைய பாவ ங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங் களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். எங்களு க்கு எதிராக தீமை செய்கின்றவர்களை நாங்கள் மன்னிக்கும் போது, எங் கள் பிதாவாகிய தேவனுக்கு பிரியமுள்ள பிள்ளைகளாக இருப்போம்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, உம்முடைய திருக் குமாரானாகிய இயேசுவைப் போல, நானும் எனக்கெதிராக குற்றம் செய்கின்றவர்களை மன்னித்து வாழ என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:19