புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 25, 2019)

விடுதலை உண்டு

2 தீமோத்தேயு 3:16

வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.


அடிமைத்தன கட்டுக்களில் இருந்து விடுதலையடைய முடியாமல், மன திலே போராடிக்கொண்டிருப்பவர்கள் அறிய வேண்டியது என்னவென்றால். எங்களுக்கு வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் பெரிதான போராட்டம் உண்டு. பொல்லாத ஆவிக்கு உட்பட்டிருக்கும் உலக வழிமுறைகளினால் பொல்லாத ஆவிகளின் சேனைகளை ஜெயிக்க, மேற்கொள்ள முடியாது. எங்கள் சுயபெலத்தால், சொந்த புத்தியால், உலகம் தரும் படி முறைகளினால் பிசாசின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் அடிமைத்தன பாவ பழக்கங்களை மேற்கொள்ள முடியாது. அப்படி செய்வது ஒரு தற்காலிகமான மாயையான தீர்வைத் தரும். ஒரு பாத்திரம் சேற்றினால் நிறைந்திருக்கும்போது, அந்த சேற்றை பல வழிகளிலே அகற்றலாம். ஆனால், அந்த பாத்திரம் மறுபடியும் சேற்றினால் அசுத்தப்படாதபடிக்கு, அதை பாதுகாக்க வேண்டும். மனிதனுடைய இருதயம் எங்கேயோ அங்கே அவனுடைய எண்ணங்களும், கிரியைகளும், வாஞ்சைகளும் இருக்கும். எனவே, இருதயத்தைப் தேவ நன்மையினால் நிறைக்கும் போது, பாவ பழக்கங்களுக்கு அங்கே இடம் அற்றுப் போய்விடும். எனவே, எங்கள் இருதயத்தை தேவனுடைய திருவசனத்தினால் நிறைக்க வேண்டும். வேதத்தை வாசியுங்கள், அதிக திகமாக வாசியுங்கள், ஜெபம் செய்யுங்கள். நீங்கள் இப்படியாக செய்ய ஆரம்பிக்கும் போது, தேவ வழிநடத்துதலை உணர ஆரம்பி ப்பீர்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆவியானவர் எங்களுகு உணர்த்துவார். தினமும் வேதம் வாசிக்கும் பழக்கம் இல் லாவிட்டால், லூக்காவின் நற்செய்தி புத்தகத்தை வாசிக்க ஆரம்பி யுங்கள். அப்போஸ்தல நடபடிகளை வாசியுங்கள், நீதிமொழிகள், சங் கீதம் போன்ற புத்தகங்களை வாசியுங்கள். ஜெபித்து பழக்கமில்லாதிரு ந்தால், அறைக்குள் சென்று முழங்காலில் நின்று, உங்கள் நிலையை தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். வேத வசனங்களை அறிக்கையி ட்டு ஜெபியுங்கள். வாக்களிக்கப்பட்ட சத்திய ஆவியானவர் சகல சத் தியத்திலும் உங்களை வழிநடத்திச் செல்வார். வேத வாக்கியங்கள் எங்கள் வாழ்வை சீர்ப்படுத்துவதற்கு வல்லமையுள்ள தாக இருக்கின்றது. எனவே வேதத்தை வாசித்து, ஜெபிக்க ஆரம்பியுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, எங்களுடைய போராயுதங்கள் மாசத்திற்குரிய பெலன் அல்ல, அதை உணர்ந்து உம்முடைய வார்த்தை வழியாக பெலப்படும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:4