புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 24, 2019)

பழிவாங்குதல் தேவனுக்குரியது

எபிரெயர் 10:30

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறி வோம்.


நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொ ள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பின வரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங் களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு கூறினார். இன்றைய நாளிலே, பல தேவ பிள்ளைகள், தேவனுடைய கிருபையின் நற்செய் தியை அறிவித்து வருகின்றார்கள். அதை பலர் அசட்டை செய்தும் விடு கின்றார்கள். சிலர் ஏற்றுக் கொள்கின் றார்கள். சிலர் அதை ஏற்றுக் கொண் டாலும், அதை மறுதலித்து பின்னிட்டு திரும்பி விடுகின்றார்கள். நாங்கள் இன்று நிர்மூலமாகாதபடிக்கு, தேவனு டைய அளவற்ற கிருபை எங்களுக்கு அருளப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்த பூமியில் குறிக்கப்பட்ட நாட்கள் நிறைவேறும் போது, நியாயத்தீர்ப்பின் நாளிலே, நாம் ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிரு க்குமே. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், நாங்கள் தேவனுடைய கிருபை யின் நாட்களை அசட்டை பண்ணுகின்றவர்களாயிருப்போம். அப்படி செய்து மனப்பூர்வமாய் பாவம் செய்கின்றவர்களுக்கு, பாவங்களினி மித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வரு மென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் பெரிய கொடிதான ஆக்கினைக்கு பாத்திரவானாக இருப்பான் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. (எபிரெயர் 10:26-31). நற்செய்தியை அறி வித்தல், தொலைந்து போன ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தல், வேதம் கூறும் எச்சரிப்பை தயவாய் அறிவித்தல், அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக ஜெபித்தல் ஆகிய இவைகளே எங்களின் பொறுப்பு. எங்களை அசட்டை செய்கின்றவர்களை பழி வாங்குதல் எங்களை அனுப்பியவரின் பொறுப்பு. எனவே நாங்கள் பெற்ற ஊழியத்தை பொறுமையுடன் நிறைவேற்றுவோம்.

ஜெபம்:

சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய நாள் வருமட்டுமாய், மற்றவர்களை நியாயந்தீர்க்காமல், நான் பெற்ற பணியை பொறுமையோடு செய்து முடிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 13:20