புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 13, 2019)

சோராமல் நன்மை செய்யுங்கள்

கலாத்தியர் 6:9

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இரு ப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.


ஆண்டுகள் கடந்து செல்லும் போது, மனிதர்கள் தேவனுடைய நன் மையை மறந்து போவது போல, நாங்கள்; மற்றவர்களுக்கு செய்த நன்மைகளை மற்றவர்களும் மறந்து போகலாம்.இதனால் நன்மைகள் செய்ய வாஞ்சையுள்ள மனிதர்களும் சோர்ந்து போய்விடுகின்றார்கள். அப்படியான சோர்வுகள் எங்கள் மனதிலுள்ள, நன்மை செய்ய வேண் டும் என்னும் வாஞ்சையை தணிக்கும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க வேண் டும். அவர்தாமே எங்கள் வாழ்க்கை யில் செய்த நன்மைகளுக்கு நாங்கள் எப்போதும் நன்றியறிதலுள்ளவர்களாக இருக்கின்றோமா என்று எங்கள் இரு தயத்தை ஆராய்ந்து பார்க்க வேண் டும். பெரும்பான்மையானோர், மற்றவர் கள் எங்களுக்கு செய்த நன்மைகளை மறந்து போய்விடுகின்றோம் என்பதை சிந்தித்து பார்ப்பதில்லை. விதைக்கப்ப ட்ட சிறிய விதை வளர்ந்து பெரிய விருட்சமாகி பலன் கொடுப்பது போல, மற்றவர்கள் எங்கள் வாழ்வில் மிகவும் இக்கட்டான நேரத்தில் செய்த சிறிய உதவியும் அவ்வண்ணமாகவே இருக்கின்றது. ஆனால், காலப்போக்கில், உதவியை பெற்ற சூழ்நிலையை மறந்து, பெற்ற சிறிய உதவிக்கு ஒரு விலையை வைக்கின்றார்கள். அதாவது, “அவர் என்ன பெரிய உதவியையா செய்தார்” என்று கூறிவிடுவார்கள். இனி வழி ஏதும் இல்லை என்று இருந்த நாட்களில், தேவன் என்னை படு குழியிலிருந்து தூக்கினார் என்பதை மறந்து, செழிப்பான ஆண் டுகளிலே, தங்கள் சாதனைகளையும், தங்கள் கிரியைகளையும் மேம் படுத்திப் பேசிக் கொள்வார்கள். அப்படியாக மனிதர்கள் நன்றி மற ந்தாலும், கர்த்தரோ நீடிய பொறுமையுள்ளவராய், தம்முடைய தயவை மனிதர்கள் மேல் பொழிகின்றார். நம்முடைய சோர்வான நேரங்களில், கருணை நிறைந்த இயேசுவை நாங்கள் நோக்கிப் பார்க்க வேண்டும். பூமியின் கடையாந்த ரங்களைச் சிரு~;டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப் படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆரா ய்ந்து முடியாதது. சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடு த்து, சத்துவமில்லாதவனு க்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

ஜெபம்:

அன்பான பிதாவே, நீர் என் வாழ்வில் செய்த உபகாரங்களை நான் ஒரு போதும் மறவாமல் இருக்கவும், மற்றவர்களுக்கு எப்போதும் நன்மை செய்வதில் குறைந்து போகாமலிருக்கவும் கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:28-29