புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 12, 2019)

பிரசங்க பீடம்

எபேசியர் 5:1-2

ஆதலால், நீங்கள் பிரிய மான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்ப ற்றுகிறவர்களாகி, கிறி ஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாச னையான காணிக்கை யாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.


பிரசங்க பீடத்தில் நின்று போதிக்க வேண்டும், வேத பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. போதிப்பவர்கள் வழியாக, தேவ செய்தி, வேதபாடங்கள் மற்றும் எங்களை பக்திவிருத்தியடையச் செய்யும் ஆலோசனைகள் கொடுக்க ப்படுகின்றது. ஆலயங்களிலே, போதிப்பவர்கள், கிழமைதோறும், ஒரு சில மணித்தியாலங்களே பிரசங்க பீடத்தில் நிற்கின்றார்கள். ஆனால், தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் (போதகர்கள், விசுவாசிகள்), அவர்க ளுடைய வாழ்க்கையே பிரசங்கபீட மாக இருக்கின்றது. எங்கள் அன்றாட வாழ்க்கை மற்றவர்களுக்கு போதக மாக இருக்கின்றது. அந்த பிரசங்க பீட த்திலே (நம்மில்) தேவ நன்மைகளை காண்பிக்கின்றவன், தேவ நாமத்திற்கு மகிமையை உண்டாக்குகின்றான். அங்கே, சாட்சியற்ற வாழ்க்கை வாழ்ப வனின் நிமித்தமாக தேவனுடைய நாமம் மனிதர்கள் மத்தியிலே தூ~pக்கப்படும். ஞாயிறுதோறும் பிரசங்க பீடத்திலிருந்து ஊழியர் பேசும் ஜீவ வார்த்தைகளை, அன்றாடம், பேசுபவரும், கேட்பவர்க ளும், நடைமுறையிலே வாழ்ந்து காண் பிக்க வேண்டும். ஆலயத்திலே நாங் கள் ஒரு சில மணி நேரம் கூடுகின் றோம். மிகுதியான நேரங்களை, வீட்டி லோ, வேலையிலோ, கல்விநிலையங்களிலோ, வேறு இடங்களிலோ செலவழிக்கின்றோம். ஆலய கட்டிடத்திற்குள்ளும், வெளியிலும், நாங் கள் எதிர்நோக்கும் எல்லா சூழ்நிலைகளிலும், மற்ற மனிதர்களுடன் இயேசுவை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. ஆனால் எல்லா வேளைகளிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் இயேசுவானவர் தம்மை சுகந்த வாசனையாக ஒப்புக்கொடுத்தது போல நாமும் நம்மை ஒப்புக்கொடுப்போம். “என்னைக் காணுவோர் உம்மைக் காணட்டும்” என்ற பாடலின் வரிக்கு அமைய, எங்கள் வாழ்க்கையை ஒரு பரிசுத்த பிரசங்க பீடமாக மாற்றுவோம். கிறிஸ்துவின் அன்பிலே வாழ்ந்து காட் டுவோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, வாழ்கையிலே வரும் சவால்களை கண்டு மனந்தளர்ந்து பின்னிட்டு போகாதபடி, உம்முடைய வார்த்தையை நம்பி அதன் படி வாழ என்னை வழிநடத்திச் செல்லும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 11:1