புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 10, 2019)

தேவனுடைய வழிகள்....

ரோமர் 9:20

அப்படியானால், மனுஷ னே, தேவனோடு எதிர்த் துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினா யென்று சொல்லலாமா?.


தேவனை அறிந்த ஒரு கும்பத்தினரின் வாழ்வு செழிப்பாக ஓடிக்கொ ண்டிருந்தது. குடும்பத் தலைவன், கையிட்டு செய்யும் காரியங்கள் யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணினார். அந்த அயலிலுள்ள இன் னுமொரு மனிதனோ பல நெருக்கடிகள் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருந்தான். அலையலையாய், பல இன்னல்கள் அவன் வாழ்க் கைப் படகை மோதிய போதும், நெறி முறை தவறாமல், கர்த்தருடைய வழி யிலே சென்று கொண்டிருந்தான். நெரு க்கடியில் இருக்கும் இந்த மனிதனை, செழிப்பாக வாழும் குடும்பத்தின் தலைவன் சந்திக்க நேர்ந்தது. அந்த வேளையிலே, செழிப்பாக வாழ்கின்ற வன்: என்னைப் பார், என் குடும்பத் தைப் பார், என் நிலையைப் பார், என் னுடைய காரியங்கள் எப்படியாக கை கூடி வருகின்றது என்பதைப் பார் என்று, தன்னுடைய செல்வாக்கையும், தேவ ஆசீர்வாதத்தையும் பற்றி அவனுக்கு போதித்தான். அவனுடைய போக்கின் தொனி, என்னை தேவன் இவ்வளவாய் ஆசீர்வதித்திருக்கின்றார், ஆனால் நீ ஏன் இவ்வளவு க~;டப்படுகின்றாய் என்று பொருட்படும்ப டியாய் இருந்தது. கிறிஸ்து இயேசுவுக்குள் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டவர்கள், காலங்கள் கடந்து சென்றதும், தேவ கிருபையை தங்கள் வாழ்க்கையில் மேன்மைப் படுத்துவதற்கு பதிலாக, தங்கள் பிரயாசத்தை (கைகளின் கிரியைகளை) மேன்மைப்படுத்தி, நாங்கள் ‘ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்ற நற்பெயரின் கீழ் வாழ்ந்து வருகின் றார்கள். இதனால், அந்த ஆசீர்வாதம், அவர்கள் வாழ்க்கையில் பெரு மையை உண்டுபண்ணுவதால், அந்த ஆசீர்வாதத்தை அவர்கள் தங்க ளுக்கு கண்ணியாக மாற்றிவிடுகின்றார்கள். அநேக தேவ பிள்ளைகள் தேவ பணிக்காக, பல இன்னல்கள் மத்தியிலும் தேவ பணியை மனம கிழ்ச்சியோடு செய்து வருகின்றார்கள். அது அவர்களை குறித்து பிதா வாகிய தேவனின் ஏற்பாடாக இருந்தால், அதைப்பற்றி விமர்சிக்கின் றவர்கள், தேவ சித்தத்திற்கு எதிர்த்து நிற்கின்றவர்களாகி விடுவார்கள். எனவே, நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

சகலமும் படைத்தவரே, நீர் உம்முடைய விருப்பம் போல, உம்முடைய பிள்ளைகளை நடத்தி, முடிவிலே அவர்களை மகிமை யிலே சேர்க்கின்றவர் என்பதன் கருத்தை உணர்ந்து வாழ கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரேமியா 18:8