புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 04, 2019)

கண்கள் இலக்கின் மேலே

பிலிப்பியர் 3:14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொ ருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.


உதைபந்தாட்ட இறுதிப்போட்டி மிக மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள், மைதானத்திலே கரகோசம் செய்து தங்கள் தங்கள் அணியை ஊக்குவித்துக் கொண்டி ருந்தார்கள். அதி திறமைவாய்ந்த வீளையாட்டு வீரர்கள் சிலர், ஒரு அணியில் இருந்தார்கள். அந்த அணியை எதிர்த்து விளையாடும் அணியின் பந்துகாப்பாளன் (பழயடமநநி நச), பந்தை தடுத்து பிடிப்பதில் மிக வும் சிறந்து விளங்கினான். அதன் இர கசியம் என்ன என்று அவனிடம் கேட் டபோது. “எப்படிப்பட்ட வீரர்கள் எங் கள் அணியை எதிர்த்து விளையாடு கின்றார்கள் என்பதை நான் பார்ப்பதி ல்லை. எத்தகைய ஆதரவு ரசிகர்களி டம் இருந்து எழுகின்றதென்பதை நான் கேட்பதில்லை. எப்போதும் என் கண் களை பந்தின் மேல் பதித்து வைத்து கொள்வேன்” என்று பதில் கூறினான். அதாவது அவனுடைய நோக்கம் எல்லாம், எப்படிப்பட்ட வீரனாகிலும்; அந்த பந்தை, எப்படியாக இலக்குக்குள் அடித்தாலும், அவன் நோக்கமெல்லாம் அந்த பந்தை பிடிப்பதாகவே இருந்தது. பிரி யமானவர்களே, எங்கள் வாழ்க்கையின் இலக்கு என்ன என்பதை திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும். எங்கள் வாழ்வின் பிரதான மான நோக்கம் என்ன? சட்டதிட்டங்களை எங்கள் வாழ்க்கையில் நிறை வேற்றுவதா? சட்டங்களை மற்றவர்கள் வாழ்க்கையில் அமுல்படுத்து வதா? அல்லது எங்கள் கிரியைகளை நியாயப்படுத்துவதா? அவைகள் அல்ல. நாங்கள் தேவசாயலாக மாறி, கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்காளிகளாயிருக்கு ம்படி, பிதாவாகிய தேவனின் சித்தம் செய்வதே எப்போதும் எங்கள் இலக்காக இருக்க வேண்டும். இந்த உலகிலே, என்ன தான் நேர்ந்தாலும், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராட வேண்டும், அந்த போராட்டத்தின் பலன் எங்கள் உள்ளான மனி தனில் ஏற்படும் தேவ சாயலாகவே இருக்க வேண்டும். நாங்கள் ஆரா திக்கின்ற தேவன், ஒரு இலக்கை நியமித்து, அதை எங்கள் பெலத் தால் அடைய வேண்டும் என்று சொல்லி, எங்களை தனியே விட்டுவி டுகின்றவர் அல்லர். எங்கள் தேவன் எங்களோடு இருந்து எங்களை நடத்திச் செல்கின்றவராயிருக்கின்றார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, சூழ்நிலைகளையும், எங்களை சுற்றியிருக்கும் மனிதர்களையும் நோக்கிப் பார்த்து மனந்தளர்ந்து போகாமல், வாழ்வின் இலக்கை நோக்கி ஓடும்படி என்னை வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:7-8