புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 31, 2019)

மாம்சத்தின் எண்ணங்கள்...

2 கொரிந்தியர் 10:5

தேவனை அறிகிற அறி வுக்கு விரோதமாய் எழு ம்புகிற எல்லா மேட்டி மையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகி றவர்களாயிருக்கிறோம்.


ஒரு காரியாலயத்தின் தொழில் அதிபர், தன்னுடைய பிரிவில் வேலை பார்க்கும் ஊழியர்களை மிகவும் கடினமாக நடத்தி வந்தான். அவ னுடைய ஊழியர்களில் ஒருவன் கோள் சொல்லுகின்றவன் என்பதை அறிந்து கொண்ட, அந்தத் தொழிலதிபர், தன்னுடைய அநியாயங்களை நடப்பிக்கும் ஊடகமாக அவனை உபயோகித்து வந்தான். எனினும் ஒருநாள், அந்த கோள் சொல்லும் ஊழி யன், சந்தர்ப்பம் கிடைக்கும் போது, தன்னைப் பற்றியும் மேல் இடத்திற்கு கோள் சொல்லுவான் என்பதை அறிந் திருந்தபடியால், நாட்கள் நிறைவேறு ம்போது, அவனை இந்த காரியாலய த்திலிருந்து அகற்றிவிட வேண்டும் என்று தன் உள்ளத்தில் சொல்லிக் கொண் டான். பிரியமானவர்களே, எங்கள் எதி ராளியாகிய பிசாசானவன், யாரை விழு ங்கலாம் என்று சுற்றித் திரிகின்றான். தேவனுக்கு விரோதமாக எங்கள் மன தில் தோன்றும் சிறிய எண்ணத்தையே அவன் விரும்புகின்றான். நாங்கள் ஆவியின்படி சிந்திக்காமல், மாம்சத்தின் படி சிந்திக்க வேண்டும் என் பதே அவனுடைய ஆசை. கொஞ்சம் புளித்தமாவானது முழுவதையும் உப்பப்பண்ணும் என்ற வசனத்திற்கு அமைய, மனதில் தோன்றும் தீமையான எண்ணம், காலப்போக்கில் எங்கள் இருதயத்தை உண ர்வற்றதாக மாற்றிவிடும். பொதுவாக, எங்கள் வாழ்விலே நாங்கள், பெரிதான குற்றங்களுக்கு உடன்படுவதில்லை. ஆனால், ஆங்கா ங்கே, இருக்கும் அற்பமான மாம்சத்தின் கிரியைகளை நாங்கள் முளையிலே கிள்ளிவிட மனதில்லாதிருந்தால், எதிராளியானவன், எங்கள் பெலவீனத்தை, தன்னுடைய தீமையான திட்டத்தை நடப்பிக்கும் ஊடகமாக உபயோகித்துவிடுவான். கோள் சொல்லி வந்த, அந்த ஊழியன், தான் தன் தொழிலதிபருக்கு தொண்டு செய்கின்றேன் என்றே நினைத்திருந்தான். எங்கள் இருதயமும் உணர்வற்றுப் போகும் போது, தேவனுடைய திருச்சித்தத்தை உணர்ந்தறிய முடியாமல் போவதனால், நாங்களும் தேவனுக்கு தொண்டு செய்கின்றோம் என்றே எண்ணிக் கொள்வோம். எனவே, தேவனுக்கு எதிரான எந்த எண்ணத்தையும் முற்றிலும் அகற்றிவிடுவோம்.

ஜெபம்:

பரிசுத்த பிதாவே, மாம்சத்தின்படி சிந்தித்து அழிந்து போகாமல், மாசம்சத்தின் சிந்தனைகளை இப்போதே என் இருதயத்திலிருந்து அகற்றி, உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:5