புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 28, 2019)

காலங்கள் நிறைவேறும் போது

மத்தேயு 25:31

அன்றியும் மனுஷகுமா ரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.


யாவரும் இரட்சிப்படையும்படியாய் தேவன் நீடிய பொறுமையுள்ள வராக இருப்பது போல, நாங்களும் மற்றவர்களை காலத்திற்கு முன் நியாயந்தீர்க்கக் கூடாது. இது தேவனுடைய பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய பண்பு. தேவனுடைய நீடியபொறுமையை அசட்டை செய்து, அங்குமிங்குமாக பாவத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற யாவரும் அறிய வேண்டியது என்ன வென்றால், தேவனுடைய கிருபை என்றுமுள்ளது என்பது உண்மை. ஆனால், எங்களுடைய வாழ்நாட்கள் இந்த பூமியிலே குறிக்கப்பட்டுள்ளது. அதிலும் வாலிப நாட்கள் சீக்கிரத்தில் கடந்து போய்விடும். சரீர பெலன் குன் றும் நாட்கள் எங்கள் வாழ்க்கையை மேற்கொள்ள முன்பு நாங்கள் தேவனு டைய பக்கமாக திரும்ப வேண்டும். கர்த்தருடைய நாள் எங்கள் மேல் ஒரு திருடனைப் போல வராதபடிக்கு, அதாவது, எந்த ஜாமத்திலே திருடன் வருவான் என்று தெரியாது. எனவே தேவனை தேட தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். இதுவே அந்த தக்க சமயம். வேறு சிலர், பரலோகத்தையும் நரகத்தையும் பற்றி பேசும் போது, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று இலகுவாக கூறிவிடுகின்றார்கள். இதனால், அவர்கள் தேவனுடைய நாளுக்கு தப்பிப் போவதில்லை. தேவனுடைய எச்சரிப்பின் சத்தங்கள் பேசப்ப டும் இடத்திலிருந்து அப்புறமாக சென்றுவிடுவார்கள். இதை தங்களு டைய முதிர்ச்சி அல்லது ஞானம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். தேவனுடைய கிருபை உண்டு என்பது நிச்சயமானதினாலேயே இவர் கள் இன்று அழிந்து போகாமல் இருக்கின்றார்கள். ஆனால், தேவனு டைய நாட்கள் நிறைவேறும் போது, நியாயத்தீர்ப்பின் நாளிலே, அவர்கள் தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டும். அந்த நாளிலே நீதியுள்ள நியாயாதிபதியாகிய தேவன் தாமே அவர்களுக்குரிய தீர் ப்பை வழங்குவார். தேவனுடைய கிருபையை அசட்டை செய்து, பிதா வின் சித்தத்தை நிறைவேற்றாமல் காலத்தை போக்கடித்தவர்கள் நித் திய ஆக்கினை அடைவார்கள், பிதாவின் சித்தம் செய்த நீதிமான்களோ நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வார்கள்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, நீர் எனக்கு தந்திருக்கும் கிருபையின் நாட்களை வீணிலே போக்கடிக்காமல், என் வாழ்வில் பிதாவவின் சித்தத்தை செய்ய உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:31-46