புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 26, 2019)

ஒரு போதும் விலகிடார்

எபிரெயர் 13:8

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறா தவராயிருக்கிறார்.


ஒரு ஊரின் கிராம சபையின் அதிகாரி, மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை நிறைந்தவனாக அந்த கிராம மக்களின் தேவைகளை, முறைப்படி சந்தித்து வந்தான். அந்த கிராமத்தின் மக்களின் வேலை யில்லா பிரச்சனையால் வந்த பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்குரிய ஒரு பெரிய திட்டத்தை, அடுத்த மாதத்தில் அமுல்ப டுத்தும்படியான ஆயத்தங்கள் யாவும் முடிவடைந்த நிலையில் இருந்தது. அந்த வேளையிலே, அந்த நாட்டில் திடீரென ஏற்பட்ட கடும் சூறாவளி யின்பாதிப்பினால், அந்தக் கிராமத்தி ற்கு வரவிருந்த பொருளாதார மறு மலர்ச்சி, மேலிடத்திலிருந்து இரத்து செய்யப்பட்டது. இந்த உலகிலே நன்மை செய்யும் உண்மையான மனம் சிலருக்கு இருந்தாலும், சூழ் நிலைகளால் தாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகின்றார்கள். திருமண நாளிலே, தம்பதிகள், இறைவன் முன் னிலையில் தங்கள் ஐக்கியத்தைக் குறித்து வாக்கு கொடுக்கி ன்றார்கள். ஆனால், காலங்கள் கடந்து செல்லும் போது, அந்த வாக்கை கைக்கொள்ள முடியாமல், ஒப்பந்தத்தை உடைத்து விடுகின் றார்கள். சூரியனுக்கு கீழே, மனிதர்களுடைய நிலை இப்படியாக இரு க்கின்றது. ஆனால், உன்னதத்திலே வாசம் செய்யும் தேவன் வாக்கு மாறாதவர். அவர் சொன்னதை செய்து முடிக்கின்ற தேவன். அவர் செய்ய நினைத்ததை யாரும் தடை செய்ய முடியாது. ஆதியிலே மனிதர்கள் பாவம் செய்த போது, தேவ சாயலை இழந்து போனா ர்கள். அந்த தேவ சாயலை மறுபடியும் பெற்றுக் கொள்ளும்படிக்கு, ஒரு மீட்பரை அனுப்புவேன் என்று தேவன் வாக்கு கொடுத்தார். குறி த்த காலத்திலே, தம்முடைய ஏக சுதனாகிய கர்த்தராகிய இயேசு கிறி ஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார். எனவே எங்கள் நம்பிக்கையை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் வைக்க வேண்டும். நன்மை செய்த மனிதர்களுக்கு நன்றியறிதலுள்ளவர்களாக வாழ்வது தேவ பிள்ளைகளின் நற்பண்பு. அதை எப்போதும் பேணிக் பாதுகாக்க வேண் டும். ஆனால் பரலோகத்திலிருந்து அனுக்கிரகம் வராவிட்டால், எந்த மனி தனும், இந்த பூமியிலே எந்த நன்மையையும் நடப்பித்து முடிக்க முடி யாது. தேவனாகிய கர்த்தரே எல்லா ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக் கின்றார்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, காலங்கள் மாறிப்போனாலும் நீர் சொன்னதை செய்து முடிக்கின்ற உண்மையுள்ள தேவன் என்பதை எப்போதும் உணர்ந்தவனா(ளா)ய் வாழ என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 146:3