புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 21, 2019)

தொடர்ந்து முன்னேறுவோம்

மத்தேயு 25:13

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகை யையாவது நீங்கள் அறி யாதிருக்கிறபடியால் விழி த்திருங்கள்.


நாளாந்த வாழ்க்கையின் தேவைகளை சந்திப்பதற்கான பழு பெருகிக் கொண்டு போவதால், பல மனிதர்களின் வாழ்வு இயந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக சில மேற்கத்தைய நாடுகளில், சாதகமற்ற காலநிலை பல மாதங்களுக்கு நீடிப்பதால், வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளாகி, குறிப்பிட்ட சில நாளாந்த நிகழ்வுக ளுடன் சென்று கொண்டிருப்பதால், வாழக்கை சலிப்படைந்து போய்விடு கின்றது. அந்த பழுவான வாழ்க்கை வட்டத்தின் பாரத்திலிருந்து சற்று ஓய்வெடுக்கும்படி, பல மனிதர்கள், விடுமுறை ஒய்வுகளை எடுத்து வேறு நாடுகளுக்குச் சென்று வருகின்றார் கள். விடுமுறை முடிந்தவுடன் மறுப டியும் தங்கள் நாளாந்த நிகழ்ச்சி நிர லுக்கு திரும்புகின்றார்கள். இப்படிப்ப ட்ட மாற்றங்கள், வாழ்க்கைக்கு புத்துணர்வை கொடுப்பதாக சில ஆய் வுகள் கூறுகின்றது. இவைகளை குறித்து பல மனிதர்கள் பல வித மாக பேசிக் கொள்வார்கள். எவை எப்படியாக இருந்தாலும், நாங் கள் எங்கிருந்தாலும், நாங்கள் நித்திய இளைப்பாறுதலை நோக்கி யாத்திரை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து விடக்கூ டாது. அந்த யாத்திரையிலிருந்து ஒய்வெடுக்கக் கூடாது. நாங்கள் எங்கு சென்றாலும் தேவனோடுள்ள உறவிலிருந்து பிரிந்து விடக்கூடாது. ஜெபிப்பதை பின் போடக்கூடாது. வேதம் வாசிப்பதை விட்டு விடக் கூடாது. சபை கூடிவருதலை விட்டுவிடக்கூடாது. இவைகளை செய்ய முடியாத இடங்களுக்கு நீங்கள் பயணம் செய்வதை கூடுமானால் தவிர்த்துக் கொள்ளுங்கள். மறைபரப்புக்காக, ஆலயங்கள் இல்லாத இடங்களுக்கு, தேவனுடைய தாசர்கள் அனுப்பப்படுகின்றார்கள், அவர் கள் தேவனால் பிரத்தியேகமான அழைப்பைப் பெற்றவர்கள். நீங்க ளோ, நான் அங்கே செல்லப் போகின்றேன், இங்கே செல்லப் போகி ன்றேன் என்று உங்கள் கண்போன போக்கில் முடிவெடுக்காமல், ஜெபத்தோடு தீர்மானம் செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும், “நான் தேவனுடைய பிள்ளை” என்பதை மறந்துவிடக் கூடாது. தங்கள் மணவாளன் வருவார் என்று எப்போதும் ஆயத்தமாகவேயிருந்த புத் தியுள்ள ஐந்து கன்னிகைகளைப்போல நாங்கள், எங்கிருந்தாலும், எப்போதும் விழிப்புள்ளவர்களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, நான் செல்லும் இடங்களிலே உம்மை மறந்து, பாவம் செய்யாதபடி எப்போதும் என் பரலோக யாத்திரையை மறக்காமல் இருக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:6