புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 18, 2019)

எல்லாம் இயேசுவே!

யோவான் 15:4

நீங்களும் என்னில் நிலை த்திராவிட்டால், கனிகொ டுக்கமாட்டீர்கள்.


லவோதிக்கேயா என்னும் சபையினர், தங்களுக்க ஒரு குறைவும் இல்லை என்று வாழ்ந்து வந்தார்கள். இந்த உலக அளவுகோலின்படி அவர்கள் செழிப்புள்ளவர்களாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்க ளையும் இயேசு அன்பு செய்தபடியால், அவர்களின் நிலையை அவர் களுக்கு தெளிவுபடுத்தினார். அவர்கள் தாங்கள் ஐசுவரியம் உள்ளவ ர்கள் என்று வாழ்ந்து வந்தார்கள் ஆனால் இயேசுவோ அவர்களை தரித் திரர் என்று கூறினார். அவர்கள் தாங் கள் விழித்திருக்கின்றோம் என்று எண் ணினார்கள் ஆனால் இயேசுவோ அவர் களை குருடர் என்று அழைத்தார். அவ ர்கள் தாங்கள் நன்றாக உடுத்தியிருக் கின்றோம் என்று நினைத்தார்கள் ஆனால் இயேசுவோ அவர்களை நிர் வாணிகள் என்று கூறினார். தாங்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்று நினைத்திருந்தார்கள் ஆனால் இயேசு அவர்களை நிர்பாக்கியமுள்ள வர்களும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும் என்று அழைத்தார். (வெளி ப்படுத்தல் 3: 15-17). கருப்பொருளாவது, தேவனை விசுவாசியாமல், இந்த உலகத்தின்படி ஞானியாக இருக்கின்றவன், தேவனுடைய பார்வையிலே மதியீனனாக இருக்கின்றான். தேவனோடு வாழாமல், இந்த உலக ஐசுவரியத்தை நம்பி வாழ்பவன், தேவனுடைய பார்வை யிலே வறியவனாக இருக்கின்றான். இயேசு தரும் மீட்பை அடை யாமல், இந்த உலக கணிப்பின்படி விலையுயர்ந்த வஸ்திரங்களாலும் ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரிக்கின்றவன், தேவனுடைய பார்வையிலே நிர்வாணியாக இருக்கின்றான். இந்த உலக அளவு கோலானது, அழிந்து போகும் உலகத்திற்கும், சரீரத்திற்கும் உரிய தாகும். ஆனால், தேவனுடைய அளவுகோல், உள்ளார்ந்த மனிதனை குறித்ததாகும். நித்தியமான வாழ்விற்குரியதாகும். இந்த உலக நிலை யின்படி மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், செல்வந்தனாக இருந்தாலும், வறியவனாக இருந்தாலும், அந்தஸ்துள்ளவனாக இரு ந்தாலும், தாழ்விடங்களிலே வாழ்ந்தாலும், இயேசு அவனுடைய வாழ் வில் இல்லை என்றால் அவன் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி ப்பட்ட வாழ்க்கை பாலைவனம் போன்றது. எனவே, நாங்கள் எந் நிலையிலிருந்தாலும் இயேசுவோடு வாழ்வதே செழிப்புள்ள கனி கொடுக்கும் வாழ்க்கை.

ஜெபம்:

அன்பான பிதாவே, இயேசு வழியாக பரலோகத்தைத் திறந் தவரே, எப்போதும் எந்நிலையிலும் இயேசு காட்டிய வழியிலே நடந்து, ஆன்மீக செழிப்புள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:6