புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 17, 2019)

எந்த நிலையிலும்…

பிலிப்பியர் 4:11

நான் எந்த நிலைமையி லிருந்தாலும் மனரம்மிய மாயிருக்கக் கற்றுக்கொ ண்டேன்.


தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டி னியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்க ப்பட்டேன் என்று தேவனுடைய மனிதனாகிய பவுல் அறிக்கையிட்டார். இந்த உலகிலே மனிதர்களில் ஒரு சாரார், மிகையான செல்வத்திலும், இன்னுமொரு சாரார் தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்லக்கூடிய மாதாந்த, நாளாந்த வருமானத்திலும், வேறு ஒரு சாரார் கடும் வறுமையி லும் வாழ்ந்து வருகின்றார்கள். சில வேளைகளிலே, வறுமையின் கொடுமை தங்கள் குடும்பத்தை வாட்டுவதால், பிழைப்பிற்காக பொய் சொல்லிவிடுகி ன்றார்கள், வேறு சிலர் அடிப்படைத் தேவைகளுக்காக களவு செய்வதில் இறங்கிவிடுகின்றார்கள். இதனால் பாவம் செய்து விடுகின்றார்கள். மிகையான செல்வத்தில் இருக்கும் பலர், உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று உல்லாசப் பயணங்களில் பல நாட்களை செலவிடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகள் விளையாட்டுத் துறையி லும், இசை நடனங்களிலும், சமுக செல்வாக்கிலும் வளரவேண்டும் என்று பலவிதமான வகுப்புகளுக்கு செல்வதாலும், படைத்த தேவனைத் தேட நேரமில்லாமல், தங்கள் பார்வையிலே சன்மார்க்கமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். “நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலி த்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்;, தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போ~pத்தருளும்.” என்று நீதி மொழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். எனவே நாங்கள் தாழ்ந்தி ருந்தாலும், உயர்ந்திருந்தாலும், பசியோடு இருந்தாலும், வயிறாற உண்டாலும், நோயுற்று இருந்தாலும், சரீர சுகத்தோடு இருந்தாலும், எந்நிலையிலும், பவுல் என்பவர் தேவனோடு வாழ்ந்தது போல நாங்க ளும் அவரோடு வாழவேண்டும். மிகையான ஐசுவரியத்தோடும் தேவனை நேசிப்பவர்கள்; உண்டு, கடும் வறுமையிலும் தேவனை தூ~pப்ப வர்களும் உண்டு. நாங்கள் எந்த நிலையிலும் “என்னைப் பெலப்படு த்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனு ண்டு” என்று தேவனை பற்றிக் கொள்கின்றவர்களாக வாழ்வோம்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உயர்விலும், தாழ்விலும், நிறைவிலும் குறைவிலும், உம்மைவிட்டு தூரம் போய்விடாதபடிக்கு, உம்மையே பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:12-13