புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 16, 2019)

குழப்பங்கள் வேண்டாம்

எபேசியர் 4:23-24

உங்கள் உள்ளத்திலே புதி தான ஆவியுள்ளவர்க ளாகி, மெய்யான நீதியி லும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.


ஆதியில் ஏதேனிலிருந்து, இன்றுவரை குழப்பங்கள் நடந்து வருகி ன்றது. குழப்பங்கள் மத்தியிலும், தேவன் எப்போதும் தம்முடைய சத்தத்திற்கு கீழ்ப்படிகின்ற பிள்ளைகளை தமக்கென்று வேறுபிரித்து வைத்திருக்கின்றார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, பர லோகம் சென்று 2000 ற்கு மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்று ஒரு சாரார், சபை கூடிவருதல் அவசியம் இல்லை என்றும், கட்டிட ங்கள் தேவையில்லை என்றும், போத ர்கள் அவசியமில்லை என்று சொல்லி வருகின்றார்கள். வேறு சிலர், பயபக் த்தியுடன், தேவனை துதிப்பதற்கு பதி லாக, துணிகரமான நடனங்களை சபை நடுவே ஆடும்படி ஊக்குவிக்கின்றார் கள். இன்னுமொரு சாரார் தசமபாகம் தேவையில்லை என்றும் பிரசங்கித்து வருகின்றார்கள். இவைகள் ஆரோக்கி யமான உபதேசங்கள் அல்ல. இவை கலங்கங்களையும், பிரிவினைகளையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துகின்றதா யிருக்கின்றது. தாங்கள் கிறிஸ்துவுக்கு சேவை செய்கின்றோம் என்று எண்ணி, கிறிஸ்தவர்களை குழப்பி விடும்படியான செய்கைகளை செய் கின்றார்கள். இப்படிப்பட்ட போதனைகளை குறித்து குழப்பமடையாம லும், இவர்களை விமர்சிப்பதில் உங்கள் நேரத்தை விரயப்படுத்தாம லும், ஒருமனதுடனும், ஒற்றுமையுடனும், தேவ பணியை செய் யுங்கள். தினமும் வேதத்தை வாசியுங்கள், ஊக்கமாக ஜெபியுங்கள், சபைகூடிவருதலை விட்டுவிடாதிருங்கள், உங்கள் சபையில் கொடுக் கப்படும் தேவ செய்திக்கே முதலிடம் கொடுங்கள். உங்களை வழிநட த்துகின்றவர்களுக்கு கீழ்ப்படியுங்கள், தேவனுடைய ஊழியத்தை உங்க ளுடைய பெலத்தின்படி தாங்குங்கள். பிரிவினைகள் தேவனால் உண் டானவைகள் அல்ல. பக்திவிருத்தி ஏற்படுத்தாத எந்த சம்பா~ணை களிலும் தர்க்கங்களிலும் கலவாதிருங்கள். அவைகளினால் ஒருவ னும் கிறிஸ்துவின் சாயலின்படி மறுரூபம் அடைவதில்லை. சத்திய ஆவியானவர் தாமே சகல சத்தியத்திலும் உங்களை வழிநடத்துவார் என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். அந்த வாக்குத்தத்தத்தை பற்றிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, குழப்பங்களையும் கலகங்களை யும் நிதானித்து அறிந்து, அவைகளை விட்டுவிடவும், உம்முடைய திருச் சித்தத்தை என் வாழ்வில் நடத்தி முடிக்கவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 10:13-15