புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 15, 2019)

கிறிஸ்தவனின் பாடுகள்

1 பேதுரு 4:16

ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.


“பாடுகள் பங்காக்கினால் பரன் இயேசு போல் மாறிடலாம்” என்று ; ஒரு பாடலின் வரி அழகாக தொகுக்கப்பட்டிருக்கின்றது. கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும்படி பிரத்தியேகமாக பிரிக்கப்பட்ட தேவ ஊழியர்கள், பல கடுமையான பாடுகள் மத்தியிலே தங்கள் பணியை நிறைவேற்றி வருகின்றார்கள். அவர் கள் அந்த பணியை ஏற்றுக்கொள்ளும் போது, தங்களுக்கு பாடுகள் உண்டு என்று அறிந்திருக்கின்றார்கள் ஆனால் அவை இன்னவிதமாக வரும் என் பதை அவர்கள் தெரிந்து கொள்ளு வதில்லை. விருந்து சாலைக்கு உண வருந்த செல்லும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பிடித்த கடைகளுக்கு சென்று, தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை தெரிந்து கொள்கின்றா ர்கள். இந்த பிரகாரமாக நாங்கள் எங்களுக்கு பிடித்த பாடுகளை தெரிவு செய்யக் கூடாது. இன்று சில மனிதர்கள், இயேசு வாரினாலே அடிக்கப்பட்டார் ஆதலால், நானும் என்னை வாரினால் அடித்துக் கொள் வேன் என்று தங்கள் சரீரங்களை காயப்படுத்திக் கொள்கின்றார்கள். இப்படியாக நாங்கள் எங்களுக்கென பாடுகளை தெரிந்து கொள்ளு வோமாக இருந்தால், அதனால் வரும் மனத்திருப்தி அற்பமானது. எங்கள் வாழ்க்கையிலே வரும் பாடுகள் அநேகம், அவைகளை சற்று சிந்;தித்துப்பாருங்கள். “நான் அயலவனுக்கு நன்மை செய்தேன், அவனோ எனக்கு தீமை செய்தான்” என்று மனதிலே வன்மம், பகை, கசப்பு குடி கொள்ளலாம். ஆனால் இயேசுவோ, நன்மையால் நிறைந்தவர், மனுக்குலத்தை மீட்க வந்தபோது, மனிதர்கள் அவருக்கு தீமை செய்தார்கள், பரியாசம் பண்ணினார்கள், அடித்தார்கள், சிலுவையிலே அறைந்தார்கள். அந்த வேளையிலும் அவர் அவர்களை மன்னித்தார். தன்னை துன்பபடுத்துகின்றவர்களுக்காகவும் தன் உயிரைக் கொடுத் தார். எனவே நாங்கள் கிறிஸ்தவர்களாக இருந்து பாடுகளை சகிக்க வேண்டும். அப்படி செய்யும் போது மனிதர்கள் எங்களை பரியாசம் பண்ணலாம். இவன் சூடு சுறணையில்லாதவன் என நகைக்கலாம். அப்படியான சூழ்நிலைகளிலும் வெட்கப்படாமல், தேவனை மகிமைப் படுத்துவோம்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, நாளாந்தம் என் வாழ்வில் வரும் பாடுகளை உம்முடைய வார்த்தையின்படி மேற்கொள்ளத்தக்கதாக என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:17