புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 14, 2019)

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்

கொலோசெயர் 3:12

நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய்,


யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீன னென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லா ரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்து வினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்த த்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள் (கலா 3:28-29). தெரிந்துகொ ள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதி யாயும், அவருக்குச் சொந்தமான ஜன மாயும் இருக்கிறீர்கள். (1 பேதுரு 2:9). இப்படியாக அநேக வாக்குத்தத்தங் கள் பரிசுத்த வேதாகமத்திலே உண்டு. இந்த வாக்குத்தத்தங்கள் யாரைக் குறி த்தது? நான் செல்லும் சபையைக் குறித்ததா? அல்லது நீங்கள் செல்லும் சபையைக் குறித்ததா? அல் லது உங்கள் அயலவர் நண்பர் செல்லும் வேறொரு சபையைக் குறித்ததா? அவைகள் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் விலையேற ப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்கு ரியது. எனவே, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ் மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண் டவர்களாய், மற்றய மனிதர்களை, மற்றய சபையினரை நியாயந்தீரப்; பதை விட்டுவிடுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே நீதியு ள்ள நியாயாதிபதி. அவர் எங்கள் மேல் நீடிய பொறுமையுள்ளவ ராயிருக்கின்றார். வேதப்புரட்டர்கள் அங்குமிங்குமாய் தோன்றியிருப்பது உண்மை. அப்படி வேத வார்த்தைக்கு விரோதமாக புதிய போதனை களை கொண்டுவருபவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்பட்டால், தயவாய் தேவ வார்த்தையை கூறுங்கள். அவர்களுடைய ஆத்துமா பாதாளத் திற்கு செல்லாதபடிக்கு ஜெபியுங்கள். அவர்கள் வேதபுரட்டர்களாகவே இருக்கத் தீர்மானித்துவிட்டால், அது அவர்களின் சொந்த தீர்மானம். நியாயத்தீர்ப்பின் நாள்வரைக்கும் கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவரா யிருக்கின்றார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தன் சொந்த வாழ்வில் நிறைவேற்றுபவனே, பரலோக ராஜ்யத்தில் பங்கடைவான். நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்த பிரியராய், தேவனுடைய சித்தத்தை உங்கள் வாழ்வில் நிறைவேற்றுங்கள்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, நீர் நீடிய பொறுமையுள்ளவராக மனிதர்களு டைய மனந்திரும்புதலுக்காக கிருபையை கூட்டி வழங்குகின்றீர். நானும் பொறுமையோடு உம் சித்தம் செய்ய உதவி செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 4:5