புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 13, 2019)

தேவனுடைய ராஜ்யத்திற்காக..

பிலிப்பியர் 2:3

மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீ ர்கள்.


ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு ஆதரவாக உடன்படிக்கை செய்து கொண்ட இன்னுமொரு நாடு, யுத்த நாளிலே, எதிர்பாராத நேரத்திலே, எதிரிகளுடன் இணைந்து, உடன்படிக்கை செய்து கொண்ட தேசத்தை தாக்கி முறியடித்தது. இத்தகைய உபாயதந்திரங்களை செய்யும் மனிதர்களை துரோகிகள் என்று அழைப்பார்கள். இப்படிப்பட்டவர்கள், எதிரிகளின் கூட்டாளிகளாக இருப்பவர்கள் அல்லது, உடன்படிக்கை செய்து கொண்ட தேசம் கொடுக்கும் பணத்தைவிட, அவர்கள் இருதயத்தி ற்கு இதமானதும், இன்னும் அதிகமான துமான கப்பத்தை எதிரிகள் தருவதாக கூறினால், அவர்கள் எதிரிகளுடன் உடன்பட்டுவிடுவார்கள். எங்களில் எவ ரும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஆதரி ப்பதில்லை அல்லது வெளியரங்கமாக ஆதரிப்பதில்லை என்பது பொருந்தும். இந்த நாட்களிலே தேவனுடைய பிள் ளைகளாக அழைக்கப்பட்ட நாங்கள், தேவனுடைய ராஜ்யத்தின் வேலைக்காக ஒன்றித்திருக்கின்றோமா என் பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு வேளை நாங்கள் செல்லும் சபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு நாங்கள் முழு மையாக ஆதரவை வழங்கிவரலாம். எங்களுடைய சபை மட்டுமல்ல, இந்த உலகிலே இருக்கும் பல சபைகள், பல நன்மையான திட்டங் களை, தேவனுடைய ராஜ்யத்திற்காக முன்னெடுத்துச் செல்கின்றா ர்கள். அவர்களுக்கு நாங்கள் எந்தவிதத்திலும் (நேரடியாகவோ, மறை முகமாகவோ) போட்டியாளர்களாக மாறிவிடக் கூடாது. உள்ளத்தை ஆராய்ந்து பார்க்கின்றவர் எங்கள் சிந்தையை அறிந்திருக்கின்றார். தேவன் எங்களுக்கு தந்தவைகளை நாங்கள் காத்துக் கொள்வதே எங்கள் முதன்மையான நோக்கம், அதில் எந்த ஐயமும் இல்லை. எதிராளியானவனாகிய பிசாசானவன் போடும், சகோதரருக்கிடையி லான போட்டி, பிரிவினை, பொறாமை என்னும் வித்து எங்கள் இரு தயத்திற்கு அருவருப்பாக இருக்க வேண்டும். எதிராளியானவன் எங்கள் சகோதரர்களை பற்றி போடும் தவறான எண்ணங்கள், தேவன் தரும் சமாதானத்தைவிட அதிகமாக எங்கள் இருதயத்தை கவர்ந்து கொள்ளுமாக இருந்தால், நாங்கள் யாருக்கு ஊழியம் செய்கின்றோம் என்பதை ஆராய்ந்து பார்த்து, தேவனின் பக்கமாக திரும்ப வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, எப்போதும் உம்மோடு நடக்கின்றவ னா(ளா)கவும், உம்முடைய ராஜ்யத்தின் கிரியைகளுக்காக எப்போதும் ஜெபிக்கின்றவனா(ளா)கவும் இருக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:12-14