புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 12, 2019)

இளைப்பாறுதல்

ஆபகூக் 3:16

இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடை வேன்.


சில வேளைகளிலே, வாழ்க்கையை அழுத்தும் சூழ்நிலைகளால் மனிதர்கள் எந்த வழியில் செல்வது என்பது தெரியாமல் தடுமாற்றம் அடைவதுண்டு. எங்கள் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட கட்டங்களை எதிர் நோக்குகின்றோம். நாங்கள் மட்டுமல்ல, வேதத்திலே காணும் தேவனுடைய மனிதர்கள் யாவரும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சந்தித்தார்கள். இப்படியாக ஆபகூக் என்னும் தீர்க்கதரிசியும் தன் னுடைய இக்கட்டின் நாளிலே தேவனை நம்பினார். துன்மார்க்கர், சிதறடிப்பதற் குப் பெருங் காற்றைப்போல் வந்தார் கள்; சிறுமை யானவனை மறைவிடத் திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந் தோ~மாயிருந்தது ஆனாலும் என்ன தான் நடந்தாலும், “ஆண்டவராகிய கர் த்தர் என் பெலன்; அவர் என் கால் களை மான் கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” எனவே இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன் என்று அறிக்கையிட்டார். நாங்கள் எப்போதும், எங்களு க்கு ஓத்தாசை (உதவி) வரும், கன்மலையை (கிறிஸ்துவை) நோக்கி எங்கள் கண்களை ஏறெடுகின்றவர்களாயிருக்க வேண்டும். தன் மகனை கடிந்து கொண்டு, தண்டித்து நடத்தும் தகப்பனைப் போல, பிதாவாகிய தேவன், தம் பிள்ளைகளாகிய எங்களை கடிந்து கொண்டு சிட்சிக்கும் வேளையில், அவருடைய வார்த்தைகளை பகை க்காமலும், பின்னாக எறிந்து போடாமலும், எங்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு மனதார எங்கள் பொரு த்தனைகளைச் செலுத்தி வரும் போது. அவர் எங்கள் கால்களை தள் ளாட விடமாட்டார். பூமியிலிருந்து எதை எடுத்து கர்த்தருக்கு பலியாக கொடுப்பீர்கள்? உங்களிடமிருந்து எதை கர்த்தருக்கு காணிக்கையாக சமர்ப்பிப்பீர்கள்? பூமியும் அதன் நிறைவும், அதன் குடிகளும் கர்த்தருடையது. எனவே, யாவையும் கர்த்தருடையது. அவர் வெறும் சம்பிரதாயமான பலிகளிலே பிரியப் படுகின்றவர்கள் அல்ல. தன் இருதயத்தை கர்த்தருடைய வார்த்தையின்படி காத்துக் கொண்டு, மனநிறைவோடு, தேவனுக்கு ஏறெடுக்கும் ஸ்தோத்திர பலிகளிலே அவர் பிரியமாயிருக்கின்றார். ஆபத்துக்காலத்தில் அவரை நோக்கி கூப்பிடும் போது, அவர் தம்முடையவர்களை விடுவிப்பார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, எப்போதும் உம்முடைய வார்த்தைகளை தியானித்து, அதன்படி என் இருதயத்தைக் காத்துக் கொண்டு, உம்மு டைய பாதுகாப்புக்குள் இருக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 50:7-15