புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 04, 2019)

விசுவாசத்தின் கிரியைகள்

எபிரெயர் 11:30

விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றி வரப்பட்டு விழுந்தது.


தேவன் என்று ஒருவர் இருக்கின்றார் என்று பலதரப்பட்ட மனிதர்கள் விசுவாசிக்கின்றார்கள். இந்த விசுவாசம் அவரவர் வாழ்க்கையில் பலன ளிக்க வேண்டுமாயின், அவரவர் தங்கள் வாழ்க்கையில் விசுவாசத் தின் கிரியைகளை நடப்பிக்க வேண்டும். கடந்த தினங்களில், இஸ்ரவேல் ஜனங்களில் பலர், எப்படி அவிசுவாசிகளானார்கள் என்ப தைக் குறித்துப் பார்த்தோம். அவர்கள் தேவனால் தெரிந்து கொள் ளப்பட்ட ஜனங்கள். தேவன் இருக் கின்றார் என்பதை அவர்களும் விசு வாசித்தார்கள். ஆனால், அந்த விசு வாசத்தை தங்கள் வாழ்க்கையில் நட ப்பிக்க முடியாமல் தங்கள் இருதயங் களை கடினப்படுத்தினார்கள். “தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசா சுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனு~னே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? என்று வேதம் கூறுகின்றது. எனவே நாங்கள் தேவன் ஒருவர் இருக்கின்றார் என்பதை விசுவாசிப்பதில், மேன்மை பாராட்டுவதிலும் நின்றுவிடாமல், அந்த விசுவாசத்தை செயலிலே காண்பிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். நீ தீமையினாலே வெல்ல ப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.” என்ற வசனத்தின்படி எங்களுக்கெதிராக மனிதர்கள் தீமை செய்யும் போது, தேவன் பேரில் எங்களுக்கு விசுவாசம் இருந்தால், நாங்கள் தீமைக்கு தீமை செய்யாமல், கோபத்தை இருதயத்தில் வைத்திராமல், நன்மை செய்து எங்கள் வழிகளை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவருடைய நேரத்திற்கு காத்திருக்க வேண்டும். மாறாக, சில மனிதர்கள், தேவன் பதில் கொடுக்காவிட்டால், நான் எனக்கு தீமை செய்தவர்களுக்கு பதில் கொடுப்பேன் என்ற உபாய தந்திரங்கள், விசுவாச கிரியைகளுக்கு முரணானதாக இருக்கின்றது. தேவன் ஒரு காரியத்தை சொன்னால், அதை விசுவாசித்து, அவர் வார்த்தையின்படி நாங்கள் செய்யும் போது, அந்த விசுவாசத்தின் பலனை நாங்கள் காணும்படி செய்வார்.

ஜெபம்:

மகத்துவமுள்ள தேவனே, உம்முடைய வார்த்தைகளை விசுவா சித்து, அவைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவைகளை என் வாழ்க்கையில் கிரியைகளாக்கிக் கொள்ள என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக் 2:14-20

Category Tags: