புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 02, 2019)

உறுதியாய் பற்றிக் கொள்வோம்...

எபிரெயர் 3:14

நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதி யாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.


தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் எப்படி அவிசுவா சிகளாக மாறிப் போக முடியும்? தம்முடைய ஓங்கிய புயத்தினாலும் பலத்த கரத்தினாலும், தம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களை, சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, வியக்கத்தகு, பலத்த அதிசயங்களோடு விடுதலையாக்கினார். அவர்கள் செங்கடல் அருகே வந்த போது, தங்களை தொடர்ந்து வரும் பார்வோனின் சேனையை கண்டு பயந்தார்கள். அவிசுவாசமான வார்த் தைகளை பேச ஆரம்பித்தார்கள். தேவனுடைய பலத்த செயல்கள், பல வற்றை கண்ணாரக் கண்ட இவர்கள், ஒரு சில நாட்களுக்குள், தேவனுக்கு எதிராக முறையிட்டார்கள். நீடிய பொறு மையுள்ள தேவன்தாமே, இவர்கள் மேல் இரங்கி, செங்கடலைப் பிளந் தார். தண்ணீர்கள் நடுவே, வெட்டாந்த ரையில் நடப்பது போல, நடந்து, செங்கடலை கடந்தார்கள். கடந்தவுடன் ஆடிப்பாடினார்கள். அப் பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவரு டைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தா ர்கள். இதன்பின் மூன்றாம் நாளிலே, மாராவிற்கு வந்தார்கள். அங்கே தண்ணீர் கசப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய அற்புதங்களை செய்த தேவன், குடிக்க தண்ணீரையும் தருவார் என்று விசுவாசிப்ப தற்கு பதிலாக முறுமுறுத்தார்கள். இப்படியாக தேவனுடைய கரத்தின் கிரியைகளை 40 வருடங்களாக கண்டும், எப்போதும் வழுவிப்போகி ன்ற இருதயமுடையவர்களாக இருந்ததால், அவிசுவாசத்தினாலே அவர் கள் தேவனுடைய இளைப்பாறுதலிலே பிரவேசிக்கக்கூடாமற்போனார் களென்று பார்க்கிறோம். எனவே, நாங்கள் அத்தகைய நிலையை அடைந்துவிடாதபடிக்கு, தேவனுக்கு எதிராக முறுமுறுக்காமல், ஆர ம்பத்தில் இருந்த நம்பிக்கையை விட்டுவிடாமல், உறுதியாய் அவ ருடைய கற்பனைகளை பற்றிக் கொண்டு, விசுவாசத்தின் கிரியை களை எங்கள் வாழ்வில் நடப்பிக்கின்றவர்களாக உறுதியாய் இருப் போம்.

ஜெபம்:

இரக்கங்களின் தகப்பனே, உம்மைவிட்டு வழுவிப்போகின்ற இருதயமுடையவனாக நான் என் வாழ்க்கையை நடத்தாமல், உம்மை உறுதியாய் பற்றிக் கொண்டு, உம் வார்த்தையின்படி வாழ என்னை நடத்திச் செல்வீராக. இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:5

Category Tags: