புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 11, 2019)

ஜீவ வாக்குகள்!

மத்தேயு 4:4

இயேசு பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினா லேமாத்திரமல்ல, தேவ னுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழு தியிருக்கிறதே என்றார்.


இயேசு, வனாந்தரத்திலே நாற்பது நாள் இரவும் பகலும் உபவாசமா யிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோத னைக்காரனாகிய பிசாசு அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அந்த வேளையிலே, இயேசு தாமே, இன்று தியானத்தில் குறிப் பிடப்பட்ட வசனத்தை கூறினார். தேவ னுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆவியும் ஜீவனுள்ளதாயும் இருக்கின் றது. அதாவது, அவர் ஒரு வார்த் தையை பேசினால், அந்த வார்த்தை யின்படி காரியம் நடந்து முடியும். அவ ருடைய வார்த்தையிலே வல்லமை உண்டு. உதாரணமாக “இரையாதே சும் மாயிரு” என்று கொந்தளிக்கும் கட லைப் பார்த்துக் கூறினார். உடனே கடல் அமைதலாயிற்று. “லாசருவே வெளியே வா” என்றார். மரித்தவன், கல் லறையிலிருந்து உயிருடன் வந்தான். இப்படியாக அசுத்த ஆவிகளுக்கும், தீராத நோய்களுக்கும் கட்டளை கொடு த்தார். அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி குணமாக்கி விடுவிக்கின்றவராயிருக்கின்றார். இன்று உங் களை அழுத்தும் பாரங்கள் எவை? உங்களை நோக்கி இருக்கும் பிரச்சனைகள் எவை? பரிசுத்த வேதாகமத்திலிருந்து, தேவ வாக்குத் தத்தங்களை வாசித்து, அதை தினமும் அறிக்கையிட்டு, விசுவாசத் தோடு ஜெபம் செய்யுங்கள். மனதை தளரவிடாது, உறுதியாய் அந்த வாக்குத்தத்தங்களிலே நில்லுங்கள். அந்த வாக்குதத்தங்களுக்கு விரோதமான காரியங்களை பேசாமலும், அவைகளுக்கு எதிரான கிரி யைகளை நடப்பிக்காமலும், பொறுமையோடு காத்திருங்கள். தேவன் தாமே தம்முடைய வார்த்தையை அனுப்பி விடுதலை தருவார். ஆன் மீக விடுதலை மட்டுமல்ல, இந்த உலகத்திலே உங்களுக்கு தேவை கள் உண்டு என்பதை தேவன் அறிவார். தேவன் தாமே, தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தினால், குறைகள் யாவையும், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் நிறைவாக்கி நடத்துவார்.

ஜெபம்:

ஜீவனுள்ள தேவனே, உம்முடைய வாக்குத்தத்தங்களை பற்றிக் கொண்டு, உம்முடைய நேரத்திற்காக காத்திருக்கும்படியான பொறுமை யைத் தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 107:20