புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 07, 2019)

நிரந்தர பேரின்பம்

யாத் 33:16

இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்மு டைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்


இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது. என சங்கீத புத்தகத்திலே வாசிக்கின்றோம். சரீர பிரகாரமாக, ஒரே இடத்திற்கு வருவது மட்டுமல்ல, பிதாவாகிய தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக, ஆவி ஆத்துமா சரீரம் ஒருமித்து வரும் போது, அங்கே பேரின்பம் உண்டு. சில வேளைகளிலே, குறிப்பிடப்பட்ட விழா ஒன்றை சிறப்பிக்கும்படியாய் சிறப்பு விருந்தினருக்குரிய அழைப்பை சிலர் பெற்றுக் கொள் கின்றார்கள்;. ஒரு வேளை அந்த நபர் ஒரு பிரபல்யமான சமுதாய அந்தஸ்து உடையவராக இருக்கலாம். அந்த அந்தஸ்து, கல்வியறிவு, பொரு ளாதார செழிப்பு, அரசியல் மற்றும் மத சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் சமுகமளிப்பதி னால், மனிதர்கள் பெருமிதமடைவது ண்டு. இந்த விழாவிற்கு இன்னார் வந் தார் என்று நாங்கள் கூறிக் கொள் வோம். ஆனால், தேவ சமுகத்திற்கு வரும் போது, சமுதாய அந்தஸ்து க்கள் மனநிறைவை கொடுப்பதில்லை. அதாவது, சமுதாய அந்தஸ்துள்ள சிலர் கூடிவருவதால் அங்கே தெய்வீக பிரசன்னம் உண்டாவதில்லை. இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தும் தலைவனாக மோசே அழைக்கப்பட்டார். ஜனங்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்ற தலைவனாகவும், பிரபல்யமான மனிதனாகவும் இரு ந்தபடியால், அவரோ அல்லது இஸ்ரவேல் ஜனங்களோ விசே~pத்த வர்களாக இருக்கவில்லை. மோசே தேவனை நோக்கி, “தேவனே, உம்முடைய பிரசன்னம் எங்களோடு வருவதினாலேயே நாங்கள் விசே~pத்தவர்கள்” என்று அறிக்கையிட்டார். எனவே நாங்கள் சபை ஐக்கியத்திலே, பேரின்பம் அடைய வேண்டுமாயின், எங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் யாவும் ஒருமித்து, தேவனை மகிமைப்படுத்த வேண் டும். இந்த உலக அளவுகோலின்படி கொடுக்கப்பட்ட மனிதர்களுடைய தராதரத்தினாலே வரும் ஐக்கியத்தின் பலன் பிரயோஜனமற்றது. ஆனால், மனிதர்கள் தேவனுடைய நாமத்திலே ஒன்று கூடும் போது, தேவன் தம்முடைய கிருபையினாலே மனிதர்களின் உள்ளத்திலே பேரின்பத்தை கொடுக்கின்றார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய மிகுந்த கிருபையினாலே, என் உள்ளத்திலே நீர் கொடுக்கும் பேரின்பத்தை பெற்றுக் கொள்ளும்படியாய் என்னை வழிநடத்திச் செல்லும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேது 2:9