புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 03, 2019)

கருத்தோடு சேவியுங்கள்...

1 சாமுவேல் 12:24

நீங்கள் எப்படியும் கர்த்த ருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்;


இயேசு கிறிஸ்து தாமே, யோவான் ஸ்நானன் என்பவரைக் குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந் தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல் லவென்றால், எதைப்பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனு~னையா? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர் கள் அரசர் மாளிகைகளிலே இருக்கி றார்கள். அல்லவென்றால், எதைப்பார் க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன் மையுள்ளவனையே என்று உங்களுக் குச் சொல்லுகிறேன். கர்த்தருக்கு வழி யை ஆயத்தப்படுத்தும்படி முன்குறிக் கப்பட்ட தீர்க்கதரிசியாகிய யோவானு டைய உபதேசத்தைக் கேட்ட ஆயக் காரர் (சமுதாயத்தினால் பாவிகள் என்று கருதப்பட்டவர்கள்) முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறா மல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள் ளிவிட்டார்கள். பிரியமானவர்களே, எங்கள் இருதயம் உணர்வடையு ம்படியாய் நாங்களே எங்களிடம் இந்தக் கேள்வியை கேட்க வேண் டும். என்ன காரணத்திற்காக ஆலயத்திற்கு சென்று வருகின்றேன்? ஏன் வேதத்தை வாசிக்கின்றேன்? ஏன் ஜெபிக்கின்றேன்? யோவானு டைய உபதேசத்திற்கு கீழ்படிந்தவர்களை தேவன் நீதிபரர் என்று அறி க்கையிட்டது போல, நாங்கள் தேவனுடைய காரியங்களை (எடுத்துக் காட்டாக: சபை கூடிவருதல், வேதம் வாசித்தல், ஜெபித்தல்) கருத் தாக செய்து வரும் போது எங்கள் வாழ்க்கையில் கேடு உண்டாகாது. மாறாக தேவனை நீதிபரர் என்று உயர்த்துகின்றவர்களாக இருப்போம். நாங்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைத் தரித்திருக்கின்றோம், ஆத லால், பகுதிபகுதியாக இவைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற மனநிலையுடன் செயற்படாமல், அவருடைய கற்பனைகள் மனமகிழ்சி யானது என்பதை உணர்ந்தவர்களாய், வாஞ்சையுடன் நித்திய வாழ்வுக்குரிய காரியங்களை தேடி, முழு இருதயத்தோடும் உண்மை யாய் அவரை சேவிக்கக்கடவோம்.

ஜெபம்:

பரலோக பிதாவே, உம்முடைய திவ்விய அழைப்பின் மேன்மையை உணர்ந்தவனா(ளா)ய், என் செயற்பாடுகளை கருத்தோடு செய்து முடிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 24:15