புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 02, 2019)

கைக்கொண்டு போதியுங்கள்

மத்தேயு 5:19

இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.


வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனு~ன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய் யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேச த்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப் பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. வேதவாக்கிய ங்கள் பேதைகளை ஞானவான்களாக மாற்றுகின்றது. ஞானவான்கள் என்று கூறும் போது, இந்த உலகத்தின் போக் கின்படி வேதத்தை கற்று, கலாசாலைப் பட்டங்களை பெற்றவர்களைக் குறிக் கிறது என்பது பொருள் அல்ல. வேத த்தை முறைப்படி கலாசாலைகளில் கற்பது நன்று. ஆனால் கலாசாலை களில் கற்பதனால் ஒருவன் தேவன் கூறும் ஞானியாக மாறிவிட முடியாது. இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, வேதத்தை நன்றாக கற்ற, ஞானவான்கள் என்று கருதப்பட்ட பரிசேயர், சதுசேயர், வேதபாரகரில் பெரும்பான்மையா னோர், இயேசு யார் என்பதையும், அவர் கூறும் ஜீவ வார்த்தைகளின் கருத்தையும் அறியமுடியாத மந்த இருதயமுடையவர்களாக இருந் தார்கள். ஒரு சமயம் இயேசு ஜெபிக்கும் போது: பிதாவே! வானத்து க்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை (தேவ இரகசியங்களை) ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்ப டுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என்று கூறினார். எப் போது ஒரு மனிதனுக்குள், “எனக்கு எல்லாம் தெரியும்” என்ற பெருமை இருதயத்தில் குடிகொள்கின்றதோ, அதன் பின்பு அவன் தேவ னுடைய வார்த்தைகளை யார் பேசினாலும் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும் இருதயம் அவனுக்குள் இருக்காது. அவரவர் தாங் கள் கற்றுக் கொண்ட தேவனுடைய வார்த்தைகளை, தங்கள் வாழ் க்கையில் கைக்கொள்கின்றவர்களே, தேவன் கூறும் ஞானவான்க ளாக இருக்கின்றார்கள். கர்த்தருக்கு பயப்படும் பயமே ஞானத்தின் ஆரம்பம். கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே நாங்கள் இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாகும்படிக்கே வேத வார்த்தை களை கற்று, அவைகளை எங்கள் வாழ்க்கை வழியாக மற்றவர்க ளுக்கு போதிக்கின்றவர்களாக வளர்ந்து வரவேண்டும்.

ஜெபம்:

அன்பின் ஆண்டவரே, வேத வார்த்தைகளை தாழ்மையுள்ள இருதயத்தோடு கற்று, முதலாவதாக என் வாழ்வை அந்த ஜீவ வார்த்தைகளின்படி வாழ உம்முடைய தூய ஆவியானவர் வழிநடத்திச் செல்வாராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:14-17