புதிய நாளுக்குள்..

தியானம் (தை 27, 2019)

பெலவீனங்களை அறிந்த தேவன்

எபிரெயர் 4:15

நம்முடைய பலவீனங்க ளைக்குறித்துப் பரிதபிக்க க்கூடாத பிரதான ஆசா ரியர் நமக்கிராமல், எல் லாவிதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.


சில வருடங்களாக, ஒரு காரியாலயத்தில் வேலை செய்து வந்த மனிதன், எதிர்பாராத நேரத்திலே, திடீரென ஒரு நாள் தன் வேலையை இழந்து போனான். தான் செய்யும் வேலையில் சிரத்தை யுள்ளவனாக இருந்தாலும், இது அவனுடைய இரண்டாவது அனுப வமாக இருந்தது. வேலையில்லை என்றால் நாளைக்கு பிள்ளைகள் என்னத்தை உண்பார்கள், வாடகைப் பணம் கட்ட வேண்டும், பாடசாலைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று, அதிக கரிசனையோடு, அவனும் அவன் மனைவியும், ஊக்கத்தோடு, வேதத்திலே காணும் அநேக வாக்கு த்தத்தங்களை அறிக்கையிட்டு, புதிய வேலை கிடைக்கும்வரை ஜெபம் செய் தார்கள். அந்த மனிதனும் அவனுடைய மனைவி மட்டுமல்ல, நாங்கள் யாவ ரும், எங்கள் வாழ்க்கைக்கு தேவை யான அநேக காரியங்களுக்காக தின மும் இயேசுவின் நாமத்தில் ஜெபித்து வருகின்றோம். இந்த சிலாக்கியம் தேவ னுடைய கிருபை. இப்படியாக, தேவை கள் வரும்போது, தேவனுடைய பாதத்தில் சேர்ந்து, பிரதி~;டைகளை முன்வைத்து, திடநம்பிக்கையோடு, நாளாந்த வாழ்க்கைக்கான, தேவை களுக்காக ஜெபிக்க அறிந்திருக்கும் நாங்கள், எங்கள் உள்ளான மனி தனிலே இருக்கும் பெலவீனங்கள் நீங்கும்படியாக, இன்னும் அதிக ஊக்கத்தோடு தேவனண்டை சேர வேண்டும். காரியாலயத்தில் வேலை இழந்து போன அந்த மனிதன், சிரத்தையோடு வேலை செய்பவனாக இருந்தாலும், அவன் முற்கோபம் உள்ளவனாக இருந்தான். இடந் துறை, அதிகாரங்கள் என்று பாராமல், மனிதர்களோடு, கடுமையாக பேசும் சுபாவமுள்ளவனாக இருந்தான். வேலைக்கும் ஆகாரத்திற்கும் ஜெபிப்பதைவிட, முதலாவதாக அவன் தன் மாம்சத்திற்குரிய பெல வீனம் நீங்கும்படியாய் ஜெபிக்க வேண்டும். அது போலவே எங்கள் வாழ்க்கையை கெடுத்துவிடக்கூ டிய பெலவீனங்களை தேவனுடைய சமுகத்திற்கு கொண்டு சென்று, பதில் காணும்வரை ஊக்கத்தோடு ஜெபிக்க வேண்டும்.

ஜெபம்:

எங்கள் நிலையை அறிந்த தேவனே, என்னுடைய உள்ளான மனிதனை கெடுக்கக்கூடிய சுபாவங்களை, என்னைவிட்டு முற்றிலிலும் அகற்றி ஜெயங்ககொள்ளத் தக்கதாய் பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 12:9