புதிய நாளுக்குள்..

தியானம் (தை 24, 2019)

ஒளி வீசும் சுடர்கள்...

மத்தேயு 4:15

இருளில் இருக்கும் ஜன ங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது


இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது. அந்த மெய்யான ஒளி இயேசு கிறிஸ்துவே. அவரிடத்திலிருந்து வரும் அந்த திவ்விய ஒளியை கொண்டு செல்லும் சுடர்களாக, தம்முடைய பிள்ளைகளாகிய எங்களை நியமித்திருக்கின்றார். சாபத்திலுள்ளவர் களை சபிக்கும் படி அல்ல. பாவத் திலே வாழ்பவர்களை பாதாளத்தில் இறக்கும்படியல்ல. தேசத்தின் மக்க ளால் மாசுபட்டிருக்கும் தேசங்களை சபிக்கும்படியல்ல. அவர்களை பாவ, சாப கட்டுகளிலிருந்து விடுவித்து, திவ் விய அழைப்பின் ஆசீர்வாதத்தை அவர் களும் சுதந்தரிக்கும்படியாகவே நாங் கள் அழைக்கப்பட்டிருக்கின்றோம். நீங் கள் வாழும் தேசத்திற்காகவும், பாவ இருளில் அமிழ்ந்து கொண்டிருக்கும் தேசங்களுக்காகவும், ஜெபம் செய்யுங் கள். நீங்கள் வாழும் தேசத்தையும், அழிந்து கொண்டிருக்கும் மற்றய தேசங்களையும் உங்கள் வாயினால் சபிக்காதிருங்கள். அப்படி அந்தத் தேசங்களை சபிப்பவர்களுடன் உடன்படாதிருங்கள். தேசங்களிலே இருள் சூழ்ந்து கொண்டிருப்பது உண்மை, தேவ பிரமாணங்களுக்கு எதிரான காரியங்கள், பல தேச ங்களிலே சட்டங்களாக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் உண்மை. ஆனால், நாங்கள் எல்லாத் தேசங்களுக்குமாக ஊக்கத்தோடு ஜெபி க்க வேண்டும். தேசங்களை எச்சரிப்பதற்கு தேவ மனு~ர்கள் சிலரை தேவன் அனுப்புவது உண்மை. அப்படிப்பட்ட எச்சரிப்பு, ஜனங்கள் அழிந்து போவதற்காக அல்ல, தங்கள் இருளான வாழ்க்கையிலிருந்து ஜனங்கள் மனந்திரும்பும்படிக்காகவே தேவன் அப்படிச் செய்கின்றார். எனவே, தேசங்களுக்காகவும் அதை ஆளும் அதிகாரிகளுக்காகவும் ஜெபியுங்கள். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவருடைய சுடர்களாக எங்கள் வெளிச்சம் மற்றவர்கள் மேல் பிரகாசிக்கட்டும். இருளில் உள்ள தேசங்கள், விடுதலையடையும்படிக்கு இன்றிலிருந்து உண்மை மனதோடு ஊக்கமாக ஜெபியுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, அழிவை நோக்கிச் செல்லும் தேசத்தின் குடிகள், தங்கள் அக்கிரமத்தில் அழிந்து போகாமல், உண்மையான மனதுடன் ஜெபிக்கும்படிக்கு, என்னை வழிநடத்தும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 2:1-3