புதிய நாளுக்குள்..

தியானம் (தை 16, 2019)

நிம்மதி அடைய வழி உண்டு...

கொலோசெயர் 3:15

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்க டவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்;


இயேசு வழியாக பாவ மன்னிப்பை பெற்ற நாம், அவர் கொடுத்த சமாதானத்தை எங்கள் வாழ்வில் அனுபவிக்க வேண்டும். அந்த சமா தானத்தை உணர முடியாமல் இருக்கும்படியாய் எங்கள் வாழ்வில் நாங்களே தடைகளை ஏற்படுத்திக் கொள்ள கூடாது. பாவ மன்னிப்பு இல்லாமல் சமாதானம் இல்லை. சமாதானத்திற்கு, பாவ மன்னிப்பின் அவசியத்தை உணர்ந்த நாம், மற்ற வர்களுடைய தப்பிதங்களை எங்கள் உள்ளத்தில் பதித்து வைக்க முடி யாது. அப்படி மற்றவர்கள் காரணத் தோடோ அல்லது காரணமின்றியோ செய்த காரியங்களை மன்னித்துவிடா மல், எங்கள் இருதயத்திலே அவற்றை குறித்து கசப்படைவோமாக இருந் தால், எங்கள் இருதயத்தில் இயேசு தந்த சமாதானத்தை நாங்களே குலை த்துப் போடுகின்றோம். ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறை உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன் னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். மன்னிப்பை குறித்து இயேசு ஒரு உவமையை சொன்னார். “ஒரு ராஜா, மனம் இரங்கி, தன்னிடம் கடன்பட்ட தன் ஊழியனின் பெரிய கடனை மன்னித்து விட்டான். மன்னிப்பை பெற்றுக் கொண்ட அந்த ஊழியன், தனக்கு கீழ் வேலை செய்யும், தன் ஊழியனின் சிறிய கடனை மன்னிக்க மனதில்லாமல், அவனை காவலில் போட்டான். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ராஜா, நான் உனக்கு மன்னித்தது போல, நீயும் உன் ஊழியனுக்கு மன்னிக்காமற் போனதென்ன என்று, கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொ டுத்தான். நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.” எனவே தேவ சமாதானம் எங்கள் இரு தயங்களை ஆளும்படிக்கு, இயேசுவிடம் இருந்து பாவ மன்னிப்பை பெற்ற நாங்கள், மற்றவர்கள் எங்களுக்கு எதிராக செய்த குற்றங்களை மனப் பூர்வமாக மன்னிக்க வேண்டும்.

ஜெபம்:

இரக்கம் நிறைந்த தேவனே, உம்முடைய மிகுந்த காருண்யத்தி னாலே என் பாவங்களை மன்னித்தது போல, நானும் எனக்கெதிராக தப்பிதங்கள் செய்பவர்களை மன்னிக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 16:23-35