புதிய நாளுக்குள்..

தியானம் (தை 13, 2019)

வாழ்வு தரும் தெய்வம்...

சங்கீதம் 103:13

தகப்பன் தன் பிள்ளைக ளுக்கு இரங்குகிறது போல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங் குகிறார்.


இயேசு என்னை பாவத்திலிருந்து மீட்டு இரட்சித்தார். மறுபடியும் நான் பாவசேற்றில் விழுந்துவிட்டேன். இது ஊர் அறிந்த உண்மை. நான் இயேசுவுக்கும்;, என்னை நம்பியிருந்தவர்களுக்கும் துரோகம் செய்து விட்டேன். இனி எனக்கு வாழ்வு இல்லை. என்பாட்டிற்கே நான் வாழ் வேன் என ஒரு வாலிபன் தன் உள்ளத்திலே சொல்லிக் கொண்டான். இப்படியான சூழ்நிலைக்குள் அகப்பட்டிருந்தால், இனி வாழ்வு இல்லை என்று உங்கள் கண்போன போக்கில் நடக்காதிருங்கள். அதிகாரி கள், ஸ்தாபனங்கள், மனிதர்கள் உங் களை வெறுக்கலாம். ஆனால், மனந்தி ரும்பி தன்னிடம் வரும் யாவருக்கும் பிதாவாகிய தேவன் அருள் புரிகின்ற வராயிருக்கின்றார். பிதா அருள்புரி வார் என்று திரும்பவும் திரும்பவும் பாவம் செய்வது மூடத்தனம். ஆனால், அறிந்தோ அறியாமலோ, ஒன்றின்பின் ஒன்றாக வந்த நிகழ்வுகளால் உந்தப்ப ட்டு, பாவம் செய்து முடங்கிப் போயிருந்தால், உங்கள் பரலோக பிரயாணத்தை விட்டுவிடாதிருங்கள். தன்னுடைய இளைய குமாரன், துணிகரமாக, தனக்குரிய சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, தூர தேசத்திற்கு சென்று முழுவதையும் அழித்துப் போட்டான். தன் வாழ்வை கெடுத்துக் கொண்டான். அவன் மனந்திரும்பி தந்தையிடம் திரும்ப முடிவெடுத்த போது, தந்தை அவனை அன்புடன் ஏற்றுக் கொண்டார். அரசாங்கத்தினால், கள்வன் என்று நிச்சயித்து, சிலுவை யிலே மரண தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த கள்வன், பகிரங்கமாக அவமானத்திற்குள்ளானான். இனி இந்தப் பூமியிலே அவன் உயிர் வாழப்போதில்லை. இன்னும் சில மணித்தியாலங்களில் மரித்துவிடுவான். ஆனாலும், அந்த வேளையிலே அருகில் சிலுவை யில் தொங்கும் இயேசுவை நோக்கி வேண்டுதல் செய்தான். நித்திய வாழ்வை பெற்றுக் கொண்டான். கர்த்தர் இரக்கம் உள்ளவர். இந்த தியானத்தை இன்று வாசிக்க கூடியதாக, அல்லது கேட்கக்கூடியதாக இருந்தால், உங்களைத் தாழ்த்தி தேவனிடத்தில் சேருங்கள். மனந்த ளர்;ந்து பரலோக பிரயாணத்தை இடைநிறுத்தாமல், இலக்கை நோக்கி தொடருங்கள்.

ஜெபம்:

மனதுருக்கமுள்ள தேவனே, துணிகரமான மீறுதல்களுக்கு என் னை விலக்கிக் காத்தருளும். இனி வாழ்வு இல்லை என்று, அழிவுக்கு என்னை நானே ஒப்புக் கொடுக்காமல், மனந்திரும்பி உம்மிடம் சேரும் இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 15:11-24