புதிய நாளுக்குள்..

தியானம் (தை 12, 2019)

பரத்திலிருந்து ஒத்தாசை வரும்

சங்கீதம் 121:1

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.


புதிய ஆண்டு ஆரம்பமாகி பதினொரு நாட்கள் கடந்துவிட்டது. இப்போது, புதிய ஆண்டிற்குரிய பரவசம் முடிந்து, இது இன்னு மொரு ஆண்டு போலாகிவிட்டது. இந்த ஆண்டை வெற்றிகரமாக ஓடி முடிப்பதற்கு தேவனுடைய வழிநடத்தல் இன்றியமையாதது. வெற் றிகரமாக வாழ்வது என்பதன் பொருளை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் பரலோக பிதாவாகிய தேவ னின் சித்தத்தை செய்வதே வெற்றிக ரமான வாழ்க்கை. உதாரணமாக, பலர் முன்னிலையில், காரணம் எதுவுமின்றி, எங்களை ஒருவர், தகாத வார்த்தை களை பேசி அவமானப்படுத்தலாம். அந்த வேளையில் கற்பனை கதைக ளில் வரும் சுப்பர் ஹீரோவை போல சண்டை செய்து, எதிரிகளை மேற்கொ ள்வது வெற்றி வாழ்க்கையல்ல. “உங் களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிற வர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” என்ற திருவார்த்தை யின்படி பொறுமையோடு அவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும். எங்கள் பெலவீன நேரங்களில், இக்கட்டான, அவமானமான சூழ்நிலையில், தேவனை நோக்கிப் பார்க்கும் போது அவரிடத்தில் இருந்து எங்க ளுக்கு ஒத்தாசை வருகின்றது. இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, கெத்சமனே பூங்காவிலே, அவர் மிகவும் வியா குலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. அவ்வேளையிலும் அவர் மறுபடியும் ஜெபம் செய்தார். பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபம் செய்தார். அந்த வேளையிலே ஒத்தாசை பரத்திலிருந்து வந்தது. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். பிரியமானவர்களே, இந்த ஒத்தாசை எங்களுக்கும் உண்டு. தேவ தூதன் வழியாகவோ அல் லது வேறுவழியாகவோ பதில் அனுப்பும் தேவன் பரத்திலிருக்கின் றார். எனவே, சூழ்நிலைகளை ஜெயிக்க, பிதாவின் சித்தம் செய்ய, இந்த ஆண்டை வெற்றியோடு கடக்க, பரத்தை நோக்கி, பதில் வரும்வரை காத்திருங்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்தி லிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, வியாகுலங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும், அவமானங்களை சந்திக்க நேரிட்டாலும், இயேசுவை போல, உம்முடைய திருச்சித்தத்தை நிறைவேற்ற என்னை நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 22:40-46