புதிய நாளுக்குள்..

தியானம் (தை 09, 2019)

கேட்டு கற்றுக் கொள்ளுங்கள்

யாக்கோபு 1:5

உங்களில் ஒருவன் ஞான த்தில் குறைவுள்ளவனா யிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக் கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட் கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.


ஒரு வைத்திய சாலையிலுள்ள அதி நவீன உபகரணத்தை இயக்கும் மருத்துவ ஆய்வுகூட உதவியாளர், அந்த இயந்திரம் இயங்கும் முறை யைக் குறித்து விமர்சித்தார். அந்த இயந்திரத்தை உருவாக்கிய பொறி யியலாளர், அவ்விடத்திற்கு வந்த போது, அந்த மருத்துவ உதவி யாளர், இந்த இயந்திரம் சரியான முறையில் அமைக்கப்படவில்லை என்று தீர்க்கமான முடிவை கூறினார். அந்த பொறியியளாலரோ, தயவுடன், ஐயா, இந்த இயந்திரத்தை வடிவமை த்து, அதை உருவாக்கி, சோதனை செய்து வெளியிடுவற்கு சில ஆண்டு கள் எடுத்தது. அநேக மருத்துவ உயிரி யல் பொறியியளாலர்கள் ஒன்று சேர் ந்து, இதை வடிவமைத்தார்கள். காரி யம் அப்படியாக இருக்கும் போது, ஒரு சில நாட்கள் இந்த உபகரணத்தை உபயோகம் செய்த உங்களுக்கு எப் படி இதன் அமைப்பை அறிந்து கொள்ள முடியும்? ஒரு காரியத்தை குறித்து அறிவு வேண்டும் என்றால், அதை அறி ந்தவர்களிடம் கேட்டு கற்பது நல்லது அல்லது எனக்கு இந்த காரியம் தெரி யாது என்று கூறுவது ஏற்புடையது என கூறினார். பிரியமானவர்களே, எங்கள் வாழ்நாட்கள் இந்த பூமியில் குறுகியது. எங்கள் அறிவு மட்டு ப்படுத்தப்பட்டது. எனவே, தெய்வீகத்திற்குரிய காரியங்கள், படைப் புக்கள், மனிதனுடைய வாழ்க்கை இவற்றை பற்றி மனத் தாழ்மை யோடு கற்றுக் கொள்ளும் மனப்பான்மை தேவை. “தேவன் கூறிய வார்த்தைகள் எனக்கு விளங்கவில்லை எனவே, இது உண்மையல்ல அல்லது இது பிழை” என்று கூறாமல், இந்த காரியம் எனக்கு விளங்கவில்லை என தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். தேவனிடம் ஞானத்தை கேளுங்கள், அவர் அதை உங்களுக்கு அருளிச் செய்வார். உங்கள் அறிவுக்கும், ஆய்வுக்கும், ஆண்டுக்கும் அப்பாற்பட்டவைகளைக் குறித்து விமர்சிக்காமல், பரலோகத்திலே வீற்றிருக்கின்ற உன்னதமானவரை நோக்கிப் பாருங்கள்.

ஜெபம்:

சகலமும் படைத்த தேவனே, வேதத்திலுள்ள திவ்விய இரகசிய ங்களை அறிந்து கொள்ளத் தக்கதான ஞானத்தை தந்து என்னை வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 11:1-3