புதிய நாளுக்குள்..

தியானம் (தை 08, 2019)

தேவனுக்கு பிரியமானவர்கள்

எபிரெயர் 11:6

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயி ருப்பது கூடாதகாரியம்;. ஏனென்றால், தேவனிடத் தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம் மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவ ரென்றும் விசுவாசிக்க வேண்டும்.


மாலை வேளையிலே, இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பிக்கவிரு க்கும், பரிசளிப்பு விழாவிற்கு வருவேன் என்ற தந்தையாரை இன்னும் காணவில்லை. வேலை செய்யும் இடத்தில், அவருடைய மேற்பார் வையாளர், இன்னும் அதிக வேலைகள் செய்யும் படி பணித்துவி ட்டார் போல தோன்றுகின்றது. அதனால் உன் அப்பாவிற்கு இன்று வரக் கிடைக்குமோ தெரியாது என தன் சின்ன மகனிடம் அவனது தாய் கூறினார். அவனோ, “என்னை பார்ப்பதற்காக, என்னுடைய அப்பா எப் படியும் வருவார்” என்று உறுதியாயிரு ந்தான். சற்று தாமதித்தாலும், குறித்த நேரத்தில், தந்தையார் அங்கே சமு கமளித்தார். மனிதர்கள் தாங்கள் கூறும் உறுதிமொழிகளை, விரும்பினா லும் நிறைவேற்றமுடியாத சந்தர்ப்பங் கள் உண்டாகி விடுவதுண்டு. அப்படி யிருந்தும், அந்த சின்னப் பையனின் விசுவாசத்தை கவனித்துப் பாருங்கள். எங்களுடைய பரம தந்தை வாக்கு மாறாதவர். அவர் சொன்னதை செய்து முடிக்கின்றவர். எங்களுக்கென முன் குறித்தவைகளை எப்படியும் நிறைவே ற்றி முடிக்கின்றவர். எனவே நாங்கள் இன்னும் அதிக விசுவாசமுள்ளவர்க ளாக இருக்க வேண்டும். விசுவாசம் இல்லாமல் எந்த ஒரு மனிதனும் தேவனுடைய காரியங்களை சரியான முறையில் அறிந்து கொள்ள முடியாது, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழவும் முடியாது. சில வேளைகளிலே, பெலவீனமான நேரங்களில், சந்தேகங்கள் மன தில் தோன்றும் போது, தேவனுடைய பாதத்தில் தயவோடு உங்கள் விண்ணப்பங்களை ஏறெடுங்கள். உங்கள் பெலவீனங்களை தெரியப்ப டுத்துங்கள். ஆனால்; விசுவாசத்திற்கெதிரான வார்த்தைகளை உங்கள் வாயினால் அறிக்கையிடாதிருங்கள். அன்புள்ள தேவன் எங்கள் நிலையை நன்றாக அறிந்திருக்கின்றார். பரலோகத்திலிருந்து நல்ல ஈவுகளை கொடுக்க தயை பெருத்தவராயிருக்கின்றார்.

ஜெபம்:

அன்பின் தேவனே, நீர் சொன்னதை செய்து முடிக்கின்றவர் என்ற வார்த்தையை அறிந்திருக்கின்ற நாங்கள் நீர் சொன்னவைகளை விசுவாசித்து, அவை நிறைவேறக்காத்திருக்கும் பொறுமையைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப்போஸ் 16:31