புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 24, 2018)

முன்னறிந்து அழைத்த தேவன்

அப்போஸ்தலர் 22:14

நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசி க்கவும், அவருடைய திரு வாய்மொழியைக்கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.


அக்காலத்திலே உரோம ராஜ்யத்தின் குடியுரிமை மிகவும் மேன் மையாக எண்ணப்பட்டது. சவுல் (பவுல் என பின்பு அழைக்கப் பட்டவர்) என்பவர் உரோம ராஜ்யதின் குடியுரிமை உடையவராக இரு ந்தார். இஸ்ரவேல் வம்சத்தில் பென்யமீன் கோத்திரத்தில் பிறந்த எபி ரெயன், இஸ்ரவேல் முறைமைகளை கடைப்பிடித்தவர், சட்டதிட்டங்க ளின்படி குற்றமற்றவர். வேத பிரமாண ங்களை கற்றுத் தேர்ந்தவர். இப்படி யாக, யூத தலைவர்கள் மத்தியிலே யும், சமுதாயத்திலும் அந்தஸ்துள்ள வர். கிறிஸ்தவர்களை சிறை ப்பிடிக்கு ம்படியாக தமஸ்கு ஊருக்கு பட்டப் பகலில் சென்று கொண்டிருந்தார். அப் படி அவர் பிரயாணப்பட்டுத் தமஸ்கு வுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலி ருந்து பேரொளி உண்டாகி, அவரைச்; சுற்றிப் பிரகாசித்தது. அவர் தரையிலே விழுந்தார். அப்பொழுது: சவுலே, சவு லே, நீ என்னை ஏன் துன்பப்படுத்து கிறாய் என்று சொல்லுகிற ஒரு சத்த த்தைக் கேட்டார். அதற்கு அவர்: ஆண் டவரே, நீர் யார் என்றார். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேய னா கிய இயேசு நானே என்றார். அப்பொழுது, ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும் என்றார். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்கு வுக்குப் போ, நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உன க்குச் சொல்லப்படும் என்றார். ஆம்! உலக முறைமையின்படி சன்மார் க்கனாக இருந்த சவுல் இப்படியான நிலையிலே இயேசுவை சந்தி த்தார். எங்கள் பிறப்பும், வம்சமும், கோத்திரமும், குடியுரிமைகளும், கல்வி அந்தஸ்துக்களும், ஒரு வேளை இந்த உலகிலே நாங்கள் யார் என்பதை நிர்ணயிக்கலாம். அவைகளால், நீதியை நிறைவேற்றுவேன் என்று ஒரு மனிதன் நினைத்தால், அந்த உலக நீதி, தேவனுடைய சித்தத்தை அவனுடைய வாழ்விலே நிறைவேற்றப் போவதில்லை. நீதி பரரை தரிசிக்கவும், அவருடைய திரு வார்த்தைகளைக் கேட்கவும், சவுல் என்பவரை தேவன் முன்குறித்திருந்தார். அது போலவே எங்க ளையும் தமக்கென முன்குறித்திருக்கின்றார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உலக தோற்றத்தின் முன்னமே, உம்முடைய உன்னத அன்பால் என்னை முன்குறித்திருக்கின்றீர், அதை உணர்ந்து உம் சித்தத்தை நடப்பிக்க எனக்கு கிருபை செய்யும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:29-30

Category Tags: