புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 23, 2018)

இயேசுவை கூப்பிடுங்கள்

லூக்கா 18:42

இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக> உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.


பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, திமேயுவின் மக னாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச் சைகேட்டுக்கொண்டிருந்தான். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். நசரேயனாகிய இயேசு போகி றார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன் இயே சுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நட ப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும் படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட் டான். இயேசு நின்று, அவனைத் தம் மிடத்தில் கொண்டுவரும்படி சொன் னார். அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும் என்றிருக் கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வை யடையவேண்டும் என்றான். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள். மனி தர்கள் போடும் பிச்சையை நம்பி வாழ்ந்திருந்த மனிதனுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை. அசட்டை பண்ணப்பட்டவனும் அற்பமா னவனுமாய் தெருவருகே இருந்தான். இந்த நிலையிலேயே இவன் இயேசுவை சந்தித்தான். பிறப்பிலிருந்து பல மனிதர்கள் பல காட் சிகளை இந்த உலகிலே காண்கின்றார்கள். ஆனால் இவனோ குருட னாக இருந்தான். இவன் கண் திறக்கப்பட்டபோதோ, ஒப்பற்ற செல் வமாகிய, கர்த்தரையே கண்டான். இந்த உலகிலே, தரித்திரர்கள், செல்வாக்குள்ளவர்களின் பெயரை சத்தமிட்டு கூப்பிடுவதை, அவ மானம் என கணிக்கின்றார்கள். பெரியவர்கள் மத்தியிலே தாழ்ந்தோர் வாயடைக்கப்படுகின்றார்கள். ஆனால் படைத்த தேவன் வறியவர் களை மறப்பதில்லை. கிருபையுள்ளவர் தம்மை நோக்கி கூப்பிடுகின்ற பெரியோரையும் சிறியோரையும் ஒருபோதும் புறம்பே தள்ளுவதி ல்லை. விசுவாசத்தோடு உங்கள் சூழ்நிலையை அவரிடத்தில் கூறுங் கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என எண்ணி மௌனமடை யாமல், இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, உம்மை நோக்கி கூப்பிடுகிற ஒருவ ரையும் நீர் புறம்பே தள்ளுவதில்லை. விசுவாசத்தோடு உம்முடைய நேரத்திற்காக காத்திருக்க என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 65:24

Category Tags: