புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 19, 2018)

என் வாழ்வில் தேவ சித்தம்...

லூக்கா 11:2

உம்முடைய சித்தம் பர மண்டலத்திலே செய்யப் படுகிறதுபோல பூமியிலே யும் செய்யப்படுவதாக;


தேவன் தாமே மனிதர்களை சுயாதீனமுள்ளவர்களாக படைத்தார். தீமையை வெறுத்து நன்மையை பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பிதாவாகிய தேவனுடைய சித்தமாயிருக்கின்றது. பொய்க்கு பிதாவ கிய பிசாசானவன், தீமையான காரியங்களை, நன்மை என்று கூறி மனிதர்களை வஞ்சிக்கின்றான். பிதாவாகிய தேவனின் நன்மை நித்திய வாழ்வு. அந்த நித்திய வாழ்வானது, இன்ப நாடாகிய பரலோகிலே, பரமன் இயேசுவோடு, நித்திய மகிழ்ச்சியோடு வாழ்வதாகும். பிசாசின் தீமையானது, மனிதர்களின் ஆத்துமாவை, நித்திய ஆக்கினைக்கு கொண்டு செல்கின்றது. அங்கே முடிவில்லாத அழுகையும் உப த்திரவங்களும் இருக்கும். ஆதலால், பிதாவாகிய தேவனின் நன்மை தரும் சித்தத்தை செய்கின்றவர்களே பரலோகத்திற்கு செல்வார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. பரலோகத்திலே எப்போதும் நன்மை இருப்பது போல, இந்த பூவுலகிலும் தேவனுடைய நன்மை நடக்கு ம்படியாய் நாங்கள் ஜெபித்து வருகின்றோம். தேவனுடைய நன்மை யான சித்தம் பூவுலகிலே நடப்பதற்கு, தேவனை அறிந்த நாம் எங்கள் தனிப்பட்ட வாழ்வில், தேவனுடைய சித்தம் நிறைவேற இடங் கொடு க்க வேண்டும். தேவனுடைய சித்தம் நிறைவேறுவதற்கு நாங்கள் முரணானவர்கள் அல்ல, ஆனால், பல வேளைகளிலே, தேவ சித்த தின் நன்மையை காண நாங்கள் இடங் கொடுப்பதில்லை. எடுத்துக் காட்டாக, பொல்லாதவர்கள் மேல் எரிச்சல் கொள்ளாதே, உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து காத்திரு, அவர் உன் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். அவர் சகல காரியங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார் என்று வேதம் கூறுகின்றது. இது தேவ நீதி, இது தேவ சித்தம். அதை எங்கள் வாழ்வில் நடத்தும்படிக்கு, “உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவ ர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.” என்று இயேசு கூறியிருக்கின்றார். ஆனால், சில வேளைகளிலே, சிலர் தங்கள் குடும்பத்திற்கு எதிராக பேசும் மனி தர்களை விட்டு வைக்க மாட்டார்கள். உடனடியாக பதிலடி கொடுத்து விடுவார்கள். தேனுடைய சித்தம் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் நிறைவேற, பொறுமையோடு காத்திருங்கள்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, உம்முடைய பூரண சித்தத்தின் மேன் மையை உணர்ந்து, எப்போதும் உம்முடைய வார்த்தையின்படி, உம்மு டைய சித்தம் என் வாழ்வில் நிறைவேறும்படி காத்திருக்க என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - மத்தேயு 5:44-48

Category Tags: