புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 13, 2018)

புறக்கணிக்கப்பட்டவர்கள்

மத்தேயு 8:3

இயேசு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.


பண்டைய நாட்களிலே, குஷ்டரோகம் என்னும் வியாதி, வலு கொடிய தாயிருந்தது. அது தொற்று நோயாக இருந்ததால், அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யாராயிருந்தாலும், சமுதாயத்தை விட்டு புறம்பா க்கப்படுவார்கள். “குஷ்டரோகம் உள்ளவனை ஆசாரியன் தீட்டுள்ள வன் என்று தீர்க்கக்கடவன்;. அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, “தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண் டும். அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண் ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவ னாக இருந்தால், அவன் தனியே குடி யிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.” என்று லேவியராகம புத் தகத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு இந்த உலகிலே தம்முடைய பணியை செய்து வந்த நாட்களிலே, குஷ்டரோகம் உள்ளவர்கள், ஊருக்குள் வந்தால், ஜனங்கள் அவர்களை கல்லெறிவார்கள். அப்படி யான சூழ்நிலை இருந்த நாட்களிலே, இயேசு தம்முடைய மலைப்பி ரசங்கத்தை முடித்து, மலையிலிருந்து இறங்கி வரும் போது, திரளான ஜனங்கள் இயேசுவின் பின்சென்றார்கள். குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். சமுதாயத்தினால் கைவிடப் பட்டு, வாழ்க்கையின் நம்பிக்கையிழந்து, புறக்கணிக்கப்பட்டவன், எப்படியோ, இயேசு யார் என்பதையும் அவர் எங்கிருக்கின்றார் என்பதை யும் அறிந்து கொண்டான். ஜனங்கள் கல்லெறிவார்கள் என அறிந் திருந்தும், மனதுருகும் தெய்வமாகிய இயேசுவிடம் சுகம் உண்டு என்ற நிச்சயத்தோடு வந்தான். இயேசுவோ, அவனை அருவருக்காமல், தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். ஒரு வேளை நோயோ அல்லது உங்கள் சூழ்நிலையோ உங்களை சமு தாயத்தில் தகுதியற்றவர்களாக கணிக்கலாம். எது எப்படியாக இரு ந்தாலும், எங்களுக்காக, புறக்கணிக்கப்பட்டு, சிலுவையிலே பாடுகள் பட்டவர், அன்போடு அழைக்கின்றார். அவரே அன்புள்ள தெய்வம் இயேசு!

ஜெபம்:

அரவணைக்கும் அன்பின் தேவனே, இந்த பூவுலகிலே, மனிதர் களின் அளவுகோலின்படி எனக்கு செய்யாமல், என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்று வழிநடத்துவதற்காக உமக்கு நன்றி! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 6:22-23

Category Tags: