புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 30, 2018)

தேவ நீதியே நீதி

சங்கீதம் 9:8

அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்.


இந்த உலகிலே நீதி நியாயங்களை குறித்து பல மட்டங்களிலே பேசப்படும் பேச்சுகளை நாங்கள் கேட்கின்றோம். நீதி நியாயம் என்று கூறும் போது உடனடியாக நாங்கள் நாட்டிலுள்ள நீதி மன்றங்களை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலிருந்து, உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக மாணவர்கள், உடன் வேலையாட்கள், சக விசுவாசிகள், அந்நியர்கள் மத்தி யில், எங்கள் அதிகாரத்திற்கு உட்ப ட்ட விடயங்களிலே பாரபட்சம் இல்லா மல், நீதியை நிறைவேற்ற வேண்டும். செல்வ செழிப்போடும் சமுதாய அந்த ஸ்தோடும், இடாம்பீகமான மாளிகை யில் வாழும் மனிதனையும், தெரு ஓரமாக சாதாரண குடிசையில் வாழும் மனிதனையும் காணும் போது, மனிதர் களின் பார்வையிலே ஏற்றத்தாழ்வுகள் உண்டாகிவிடுகின்றது. பல நாடுகளிலே, தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமல், நியாயம் விசாரிக்கும் சில மனிதர்கள் இருக்கின்றார்கள். நீதிமன்றங்களிலேயும் நாட்டின் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று அதற்காக உழைக்கின்ற நீதவா ன்களை பற்றி செய்திகள் வழியாக கேள்விப்பட்டிருக்கின்றோம். எனி னும், நாடுகளிலுள்ள நீதிமன்றங்கள், அந்த நாட்டின் சட்டதிட்டங்க ளுக்கு கட்டுப்பட்டிருக்கின்றது. எப்படியெனில், இந்த நாட்களிலே, சில மேற்கத்தைய நாடுகளிலே, வேதபிரமாணங்களுக்கு விரோதமான செயல்களை சட்டமாக்கிவிடுகின்றார்கள். அவை சட்டமாக்கப்பட்டபின், அந்த நாட்டில் குறிப்பிட்ட பாவம், நீதியாக எண்ணப்படுகின்றது. எனவே இந்த உலகிலே மனிதனால் ஏற்படுத்தப்படும் நீதி நியாய ங்கள் குறைவுள்ளது. “தேவன் ஒருவரே நீதியுள்ள நியாயாதிபதி” அவருடைய ஆளுகையில் அநீதிக்கு இடமில்லை. மனிதர்களை அவர் களின் அந்தஸ்த்தின்படி கண்சாடைசெய்யாமல், அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதி செய்வார். சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக் கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். எங்கள் கர்த்தருக்கு ஒத்த சிந்தையிலும் செயலிலும் நாங்கள் வளர்ந்து பெருக வேண்டும்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, என் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயங்களிலே, பட்சபாதமில்லாமல், சிறுமைப்பட்டிருக்கின்றவர்களின் வாழ்க்கையிலே நீதியை நடப்பிக்கும் உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:1-9