புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 27, 2018)

தேவனுடைய கற்பனைகள்

யோபு 23:12

அவர் உதடுகளின் கற்ப னைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடையவாயின் வார்த்தைகளை எனக்கு வேண் டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத் துக்கொண்டேன்.


மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆகாரம் எவ்வளவு அவசியமானதென்பதை நாங்கள் யாவரும் அறிந்திருக்கின்றோம். ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனு~ன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அவன் உத்தமத்தை சோதிக்கும்படி பிசாசானவன், தேவ உத் தரவுடன் வந்தான். இதனால் அவனுக் குண்டான செல்வங்கள் எல்லாவற்றை யும் அவன் இழந்து போனான். பிசாசா னவன், யோபின் உள்ளங்கால் தொட ங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதி த்தான். பசி என்றால் என்னவென்று அறியாத செல்வந்தன், இப்போது, ஒன்றுமில்லாதவனாய், வருத்தம் நிறை ந்தவனாய், ஒரு ஓட்டை எடுத்து, தன் னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். இப்படிப்பட்ட சோத னைகள் மனிதர்கள் வாழ்வில் வரும் போது, சிலர் தேவனைக் கூட மறுதலித்து விடுவார்கள். தேவனுக்கு விரோதமான காரியங்களைப் பேசுவார்கள். ஆனால் யோபு என்ற இந்த மனிதன், தன் வாழ்க்கையில் செல்வம் மிகுதியாக இருந்த போது மாத்திரமல்ல, தன் நிலைமை எப்படியாக இருந்தாலும் தேவ னையே நம்பி வாழ்ந்து வந்தான். தன்னுடைய இக்கட்டின் நேரத்தில், ஆகாரத்திற்காக ஜெபம் செய்யாமல், தேவனின் உதடுகளின் கற் பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை. அவருடைய வாயின் வார்த்தைகளை, எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிக மாய்க் காத்துக்கொண்டேன் என்று மன உறுதியுடன் அறிக்கை செய் தார். ஏனெனில், தேவனுடைய வார்த்தையில் மட்டும்தான் தன் ஆத்து மாவிற்கு நித்திய ஜீவன் உண்டு என்று திட்டமாக அறிந்து கொண் டான். இந்த பூவுலகிலே, எங்கள் நிலை எப்படியாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தையை பற்றிக் கொண்டு வாழவேண்டும். உயர்ந் திருந்தாலும், தாழ்ந்திருந்தாலும் அவருடைய கற்பனைகளைவிட்டு விலகாமல் அதன் வழியிலே உறுதியாக நிற்க வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளினாலும் மனிதன் பிழைப்பான் என்ற சத்தியத்தை உணர்ந்து, உம் கற்பனைகளின்படி வாழ என்னை நடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 4:12-13